Maniratnam: மணிரத்னத்துக்கே போதை பழக்கத்தை பழகிவிட்டது ரஜினி பட ஹீரோயினா? சுசித்ரா சொன்ன ஷாக் தகவல்!
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும், போதை பொருள் சம்பவம் குறித்தும்... அதில் சம்பந்தப்பட்டுள்ள சில நடிகர்கள் பற்றியும் சுசித்ரா தன்னுடைய பேட்டியில் பேசி உள்ளார் .

கடந்த ஜூன் 23ஆம் தேதி போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இவருடைய வீட்டில் இருந்து நான்கு கிராம் கெக்கேன் போதை பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவருடைய ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தபோது... ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதன் பின்னர் நடிகர் ஸ்ரீகாந்தை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிபதி அவரை ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார் .
இதற்கு இடையில் ஸ்ரீகாந்த் தரப்பில் இருந்து அவசர மனுவாக ஜாமீன் கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னுடைய பிள்ளைகள் இருவரும் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை. அவனை பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை தனக்கு உள்ளது. தான் இல்லை என்றால் அவன் துடித்துப் போவான் என பாசமுள்ள தந்தையாக கோரிக்கை வைரத்தார். ஆனால் நீதிபதி, குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுக்க இயலாது என்றும், சிறப்பு நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

கைதுக்கு பின்னர் ஸ்ரீகாந்த்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை வைத்து 'தீக்கிரை' என்கிற திரைப்படத்தை தயாரித்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் தனக்கு போதை பொருள் பழக்கத்தை பழகி விட்டதாக கூறி இருந்தார். தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி ரூ.10 லட்சத்தை கேட்டபோதெல்லாம் அவர் போதை மருந்தை கொடுத்ததாக தெரிவித்தார்.
ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதை மருந்து வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், போலீசார் தற்போது அவரையும் கைது செய்துள்ளனர். அதேபோல் கிருஷ்ணா கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி, அதனை தன்னுடைய நண்பர்களுக்கும் கொடுத்தது, அவரது செல்போன் சேட் மூலம் தெரியவந்ததாக போலீசார் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்தது. ஆனால் கிருஷ்ணா இதனை தற்போது வரை ஒப்புக்கொள்ளவில்லை.
தன்னுடைய உடலில் உள்ள பிரச்சினைகளை குறிப்பிட்டு கூறி, நான் போதை மருந்தே பயன்படுத்தியது இல்லை என கூறி வந்தார். அதே போல் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், ரத்த பரிசோதனையில் தான் போதை மருந்து பயன்படுத்தவில்லை என வந்துள்ளது என சுட்டி காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது திரையுலகில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பல பிரபலங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படலாம் என்றும், பலருக்கு போலீசார் நேரடியாக சம்மன் அனுப்பி... விசாரணை செய்யவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் தான் ஏற்கனவே தனுஷ் கார்த்திக் குமார் கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மீது குற்றம் சாட்டி இருந்த சுசித்ரா மணிரத்தினம் குறித்து பேசி அதிர வைத்துள்ளார். அண்மையில் இவர் இது குறித்து தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தொகுப்பாளரிடம் மணிரத்னத்திற்கு போதை மருந்து கொடுத்தது யார் என்பது உங்களுக்கு தெரியுமா? என அதிர்ச்சி கேள்வி ஒன்றை எழுப்பினார் .

பின்னர் அந்த தொகுப்பாளர் இதுவே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என கூறிய நிலையில், மனிஷா கொய்ராலா தான் மணிரத்னத்துக்கு போதை மருந்தை பழக்கப்படுத்தினார். அவருடைய முன்னாள் காதலர் பெயரையும் குறிப்பிட்டு, அவர் தான் அதற்கு டீலராக இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் கேட்பவர்களுக்கே பேரதிர்ச்சியாக மாறி உள்ளது. இன்னும் பல அதிரடி தகவல்களை தன்னுடைய பேட்டியில் சுசித்ரா கூறியுள்ளார். மனிஷா கொய்ராலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாபா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















