STR 48: சிம்பு - ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் இணையும் எஸ்டிஆர் 48 ... விரைவில் சென்னையில் தொடங்கும் ஷூட்டிங்!
STR 48: சிம்பு - ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் இணையும் எஸ்டிஆர் 48 ... விரைவில் சென்னையில் தொடங்கும் ஷூட்டிங்!
எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பத்து தல படத்துக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணையும் திரைப்படம் எஸ்டிஆர் 48.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 54ஆவது திரைப்படமான இந்தப் படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு கதையை கூறியதாகவும், ஆனால் சில காரணங்கள் அவர் இந்தத் திரைப்படத்தில் ரஜினி நடிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் கதை ரஜினிகாந்திடம் கூறப்பட்டதாக இருக்கலாம் என திரை ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.
மேலும் இந்தப் படம் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட உள்ளதாகவும் நடிகைகள் பூஜா ஹெக்டே, திஷா பதானி ஆகியோருடன் இந்தப் படத்துக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் இந்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் கமல் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தபோது நடிகர் சிம்பு, கமலுக்கு பதிலாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான பிக் பாஸ் 24x7 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி உதவினார். இதனையடுத்து சென்ற ஆண்டு நடைபெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் மீதான தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில், கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
ஏற்கெனவே தன் கலையுலக குருவாக சிம்பு கமலை ஏற்று அவரது பெரும் ரசிகராக வலம் வந்த நிலையில், இந்த நிகழ்வுக்குப் பின் இருவரது நட்புறவு மேலும் உறுதியானது.
இந்நிலையில் கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனுடன் சிம்பு கைக்கோர்ப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதி வெளியானது. கனவுகள் நிச்சயம் நனவாகும் எனக் கூறி சிம்பு முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 21 Years of Gemini: ஜெயிக்காது என நினைத்த சரண்.. மொட்டை போட்ட ஏவிஎம் சரவணன்.. மெஹா ஹிட் “ஜெமினி” படம் உருவான கதை..!