மேலும் அறிய

என் கணவர் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்...நீளிரா படம் குறித்து பாலுமகேந்திரா மனைவி அகிலா

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு

இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி   தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் 'நீளிரா' திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா 'நீளிரா' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில், ''என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் 'நீளிரா' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.

இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ''நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.

ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது அதை உடைக்கக்கூடிய முதல் படமாக 'நீளிரா' இருக்கும்.

இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌ ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி," என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ''இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.

நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,'' என்றார்.

இயக்குநர் சோமிதரன் பேசுகையில், ''நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, 'நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.‌

படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.

தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில்  சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர்  கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி," என்றார்.

நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில், ''சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது.‌

இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம்,  மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.

சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,'' என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ''மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி.

இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன்.‌ நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும்.

இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம்.‌ ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. 

ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.

படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்," என்றார்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேவா இசையில் பாடகராக அறிமுகமான விஜய்... ரசிகன் முதல் பல ஹிட் பாடல்கள் வரை!
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்
தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget