Thunivu Varisu: ரிலீசுக்கு முன்பே வாரிசை பின்னுக்கு தள்ளிய துணிவு.. சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்?
ரிலீசுக்கு முன்பே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை, அஜித்தின் துணிவு திரைப்படம் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Thunivu Varisu: ரிலீசுக்கு முன்பே வாரிசை பின்னுக்கு தள்ளிய துணிவு.. சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்? special show update for vijays varisu and ajiths thunivu movie Thunivu Varisu: ரிலீசுக்கு முன்பே வாரிசை பின்னுக்கு தள்ளிய துணிவு.. சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/07/1d81b8fa2ab28410e9a22441e4efc39f1673054768622571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் ஒரே நாளில் வரும் 11-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்துள்ளது. பொதுவாக, உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.
சிறப்பு காட்சி:
இந்த நிலையில், துணிவு படத்திற்காக வரும் 10-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவது உறுதி என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் சிறப்பு காட்சியே திரையிடப்படும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் துணிவு திரைப்படம் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதால், முதல் நாள் வசூலில் வாரிசு திரைப்படத்தை துணிவு திரைப்படம் எளிதில் முந்திவிடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் பொங்கல் பண்டிகை தமிழ் திரையுலகிற்கு கொண்டாட்டமாக அமையும் வகையில், வரும் ஜனவரி 11ம் தேதி அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாக உள்ளது. இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
துணிவு கதை என்ன?
கடந்த ஒரு மாத காலமாக இரு படங்களுக்குமான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், துணிவு மற்றும் வாரிசு படங்களின் ட்ரெயிலர்கள் ரிலீசான பிறகு அவற்றின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள துணிவு படத்தில் நடிகர் அஜித் கொள்ளை கும்பல் தலைவனாக நடிக்கிறார். அவருடன் மலையாள பிரபல நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, வீரா, பிரேம், பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு படத்தின் ட்ரெயிலரில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் ரக்ட் பாயாக தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இதனால், துணிவு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு கதை என்ன?
அதற்கு நேர் எதிராக வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் குடும்பக் கதைக்களத்தில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுக்க, முழுக்க குடும்பத்தை மையமாக கொண்ட திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். வாரிசு டிரெய்லரில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், படம் ஒரு எமோஷனல் டிராமாவாக தான் இருக்கும் என படத்தை ஏற்கனவே பார்த்த சில திரைநட்சத்திரங்கள் தெரிவித்துள்ளனர். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஷ்யாம், பிரபு என பலர் நடித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)