மேலும் அறிய

Watch video : கமலுக்கு டப்பிங் பேசிய எஸ்.பி.பி... இந்தியன் படத்தில் நடந்த மிக்ஸிங்... வைரலாகும் பிளாஷ்பேக் வீடியோ

Watch Video : இந்தியன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்காக எஸ்.பி.பி டப்பிங் பேச என்ன காரணம்? தற்போது வைரலாக என்ன காரணம்?

திரையுலகை பொறுத்தவரையில் பெரும்பாலான நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் குரல் கொடுப்பார். ஒரு சில சமயங்களில் மொழி பிரச்சினையால் வேறு ஒருவர் டப்பிங் செய்ய நேரிடும். ஆனால் ஒரு சில நடிகர்கள் அவர்களுக்கான போஷன்களில் அவர்கள் மட்டுமே டப்பிங் பேசுவார்கள். அதில் ஒருவர் தான் கணீர் குரலுக்கு சொந்தக்காரரான உலகநாயகன் கமல்ஹாசன். அவரை போல பலரும் மிமிக்கிரி செய்யலாம் ஆனால் ஆச்சு அசலாக அவரின் குரலில் பேச யாராலும் முடியாது. 

ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பி ஒரு முறை கமல்ஹாசனுக்காக டப்பிங் பேசியுள்ளார் என்பது தான். இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் இந்த சூழலில் இந்தியன் முதல் பாகத்தில் நடைபெற்ற ஸ்வாரஸ்யமான சம்பவம்  ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Watch video : கமலுக்கு டப்பிங் பேசிய எஸ்.பி.பி... இந்தியன் படத்தில் நடந்த மிக்ஸிங்... வைரலாகும் பிளாஷ்பேக் வீடியோ

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'இந்தியன்' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட காப்பியில் இரண்டு இடத்தில் பயன்படுத்தப்பட்ட வசனங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய வார்த்தைகளை சேர்க்க சொல்லி சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனால் டப்பிங் செய்யும் இடத்திற்கு வர முடியவில்லை. 

அதே சமயத்தில் தான் இந்தியன் படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு டப்பிங் பேசுவதற்காக எஸ்.பி.பி வந்துள்ளார். எனவே படக்குழு அவரை வைத்தே கமல் டப்பிங் பேச வேண்டிய இடத்தில் புது வார்த்தையை எஸ்.பி.பி குரலில் சேர்த்துள்ளனர். இந்த தகவல் அந்த காட்சியின் வீடியோவுடன் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது ஜூலை 12ம் தேதி வெளியாக தயாராக உள்ளது 'இந்தியன் 2 'திரைப்படம். இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் வீடியோ வைரலாகி வருவது கூடுதல் புரொமோஷனாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget