Cinema Round-up : வாரிசின் அம்மா பாட்டு; அந்தரத்தில் பறந்த டாம் க்ரூஸ்..கங்கனா எழுதிய கடிதம்! - பரபர சினிமா செய்திகள்!
Cinema Round-up : பொங்கலையொட்டி வாரிசு படம் வெளியாகும் நிலையில், அப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் சினிமா ரசிகர்களை சூழ்ந்து வருகிறது.
இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் வாரிசு படத்தின் 3வது சிங்கிள்
டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு 3 ஆம் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ”சின்னகுயில் சித்ரா பாடியுள்ள இந்தப்பாடலின் போஸ்டரில் ‘அம்மா இது உனக்காக என்றும் வாரிசின் ஆன்மா’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட ட்வீட்டில், “சித்ரா அம்மா யூ ஆர் சோ ஸ்வீட்..விவேக்கின் பாடல் வரிகள் நிறைய இதயங்களை வெல்லும் மற்றும் வம்சியின் பாடல் மேக்கிங் ரசிகர்களை எமோஷனலாக்கி, அழ வைக்கும்” என தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் 3வது பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதில் ’ஆராரிராரோ கேட்குதம்மா...நேரில் வந்தது என் நிஜமா...நாம் கொண்ட காயங்கள் போகுதமா..நாடியும் மெல்லிசை ஆகுதமா..பிள்ளையின் வாசத்தில் ஆசைகள் தோரணம் ஆகுதமா” என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது.
வானில் பறந்த டாம் க்ரூஸ்.. வியந்து போன சூர்யா!
Unbelievable!!! Woooowww!!!! https://t.co/8UANLusavk
— Suriya Sivakumar (@Suriya_offl) December 19, 2022
மிஷன் இம்பாஸிபிள் படப்பிடிப்பில், டாம் க்ரூஸ் வானத்தில் பறந்து பைக் ஓட்டி பெரிய ஸ்டண்ட் செய்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. அந்த வீடியோவை நடிகர் சூர்யா, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நம்பவே முடியவில்லை..வாவ்வ்வ்” என்ற கேப்ஷனை எழுதி அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சியை காண வந்த நயன்
நயன்தாரா நடித்த கனெக்ட் படம், தமிழகத்தில் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் திரையிடப்பட்டது. அவர் நடித்த படத்தை பார்க்க, விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார் நயன். நேற்று எடுக்கப்பட்ட நயன் விக்கி க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.
புத்தம் புது ஆடி கார் வாங்கிய சுதா கொங்கரா
Njoying going green with my first car ever with my favourite people!❤️ #ManiSir @Suriya_offl @gvprakash @rajsekarpandian pic.twitter.com/D4NLoQFALj
— Sudha Kongara (@Sudha_Kongara) December 19, 2022
ஆடி கார் வாங்கியுள்ள சுதா கொங்கரா, அது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டுள்ளார். முதன்முறையாக தான் எலெக்ட்ரிக் கார் வாங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள சுதா கொங்கரா தன் நண்பர்களான நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தன் குரு மணிரத்னம்,நடிகர்கள் சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்ட கங்கனா
மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் 'எமர்ஜென்சி' படத்தின் படப்பிடிப்பிற்காக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த மக்களவை செயலாளரிடம் கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளார் கங்கனா ரனாவத். அரசு ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
Kangana Ranaut Was Allowed To Shoot #Emergency at PM House New #Delhi Then Why Not in Parliament? #KanganaRanaut𓃵 Pls Kindly Give Permission Sir, @PMOIndia @AmitShah @LokSabha_PRIDE 🙏 #KanganaRanaut pic.twitter.com/QmAa79VBdv
— Pooja #Tejas ✈️ In Cinemas Soon.. 😇🇮🇳 (@PoojaKRFan) December 18, 2022
தனியார்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் வீடியோ எடுக்க அனுமதியில்லை. அப்படியிருக்கையில் அங்கு படப்பிடிப்பு நடத்த கோரி கங்கனா ரனாவத், மக்களவைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது தற்போது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.