Kottukkaali OTT Release : சூரி , அனா பென் நடித்துள்ள கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது

கொட்டுக்காளி
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி அன்னா பென் நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கூழாங்கள் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற பி.எஸ் வினோத்ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கூழாங்கல் படத்தைப் போலவே கொட்டுக்காளி திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை திரையரங்கில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டது படக்குழு.
கொட்டுக்காளி பற்றி அமீர்
கொட்டுக்காளி திரைப்படத்துடன் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படமும் வெளியானது. சூரி நாயகனாக நடித்த விடுதலை மற்றும் கருடன் ஆகிய இரு படங்களும் பெரியளவில் வெற்றி கண்டன. இதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி படத்திற்கு மக்களிடம் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கமான வெகுஜன சினிமா பாணியில் இல்லாத காரணத்தினால் இப்படம் கமர்ஷியல் பட ரசிகர்களுக்கு செட் ஆகவில்லை.
படத்திற்கு மேலும் நெகட்டிவிட்டியை பரப்பும் வகையில் அமைந்தது இயக்குநர் அமீரின் கருத்து. கொட்டுக்காளி திரைப்பட விழாவில் திரையிடப்பட வேண்டிய படம் இப்படத்தை திரையரங்கத்தில் வெளியிடுவது என்பது அப்படத்திற்கே செய்யும் கொடுமை என அமீர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமீரின் கருத்திற்கு சினிமா ஆர்வலர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்தார்கள்.
கொட்டுக்காளி ஓடிடி ரிலீஸ்
Our #Kottukkaali will be streaming on @PrimeVideoIN starting tomorrow, September 27!@Siva_Kartikeyan @KalaiArasu_ @sooriofficial @PsVinothraj @AnnaBenofficial @sakthidreamer @thecutsmaker @valentino_suren @alagiakoothan @Raghav4sound @promoworkstudio @kabilanchelliah… pic.twitter.com/yRC69TsoJu
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 26, 2024
கொட்டுக்காளி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை செப் 27 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. ஓடிடியில் படம் வெளியானப்பின் இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான விமர்சனங்களை தருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .
மேலும் படிக்க : Sattam En Kaiyil Review : உங்ககிட்ட இருந்து இத நாங்க எதிர்பார்க்கல சதீஷ்... சட்டம் என் கையில் திரைப்பட விமர்சனம்
Sep 27 Release : மெய்யழகன் முதல் தேவரா வரை...செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் படங்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

