மேலும் அறிய

Sep 27 Release : மெய்யழகன் முதல் தேவரா வரை...செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் படங்கள்

கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் முதல் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா வரை வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்க்கலாம்

மெய்யழகன்

கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகி இருக்கும் படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி . ராஜ்கிரண் , ஶ்ரீதிவ்யா , தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

தேவரா

டோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவாரா'. இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் பாலிவுட் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜான்வி கபூர் மட்டுமல்ல பாலிவுட் நடிகர் சைப் அலி கானும் இப்படத்தின் மூலம் டோலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் படங்களில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று தேவரா.

ஹிட்லர்

படைவீரன் , வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தனா தற்போது விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ள படம் ஹிட்லர்.  செந்தூர் ஃபிலிம் இண்டன்நேஷ்னல் இப்படத்தை தயாரித்துள்ளது. கெளதம் மேனன் , ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி நடித்த முந்தைய இரு படங்களான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் பெரியளவில் கவனம் பெறவில்லை. ஹிட்லர் படம் அவருக்கு வெற்றிபடமாக அமையும் என விஜய் அண்டனி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

சட்டம் என் கையில்

நகைச்சுவை நடிகர் சதீஷ் 'நாய் சேகர்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படம் சட்டம் என் கையில். சிக்ஸர் திரைப்படத்தை இயக்கிய சாச்சி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சம்பதா , அஜய் ராஜ் , பாவெல் நவகீதன் , வித்யா பிரதீப் , மைம் கோபி , ரித்விகா தமிழ்செல்வி , கஜராஜ் , பவா செல்லதுரை , வெண்பா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

பேட்ட ராப்

எஸ்.ஜே சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பேட்ட ராப். வேதிகா , ரியாஸ் கான் , மைம் கோபி , பகவதி பெருமாள் , ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டி இமான் இசையமைத்துள்ளார். காமெடி , செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் கலந்த ஃபேமிலி என்டர்ட்டெயினராக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது பேட்ட ராப்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Embed widget