யுவனின் மனம் மயக்கும் நைட் ப்ளேலிஸ்ட்..!
எல்லோருக்கும் ஒரு ஃபேவரைட் யுவன் ப்ளேலிஸ்ட் இருக்கும்.
தமிழ் சினிமா உலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர் ராஜா. இவர் தனது 16 வயதில் இசையமைப்பாளராக திரை இசை பயணத்தை தொடங்கினார். முதல் சில படங்கள் சரியாக அமையவில்லை. அத்துடன் இவர் இசை மீது பல விமர்சனங்களும் எழுந்தது. எனினும் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு தீனா,நந்தா,காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களில் இவரின் இசை மிகவும் சிறப்பாக அமைந்தது. அதன்பின்பு இவருடைய இசை மீது எழுந்த விமர்சனங்கள் குறைய தொடங்கின. இவரின் பல படங்களின் பாடல்கள் மெகா ஹிட் அடித்தன.
இந்தச் சூழலில் இரவு நேரத்தில் கேட்க கூடிய சில யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் என்னென்ன?
1. முன்பனியா முதல் மழையா:
நந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இந்தப் பாடலில் யுவன்சங்கர் ராஜாவின் இசை மற்றும் எஸ்பிபியின் குரல் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் இப்பாடலின் வரிகளும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். குறிப்பாக,
"என் இதயத்தை
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்துவிட்டேன்
உன் விழியினில் உன்
விழியினில் அதனை
இப்போது கண்டு பிடித்து
விட்டேன் இதுவரை
எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன்
புன்னகையில் வாழ்கிறேன்
நான் உன் மூச்சிலே.. "
2. போகாதே போகாதே:
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பார். தன்னுடைய இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. இப்பாடலின் வரிகளும் அவருடைய குரல் இணைந்து கேட்பதற்கு அந்த உணர்வை சரியாக கொண்டு சேர்க்கும்.
"அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும்
நீதான் கொடுத்தாய் கண் தூங்கும்
நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது
போல் என் வாழ்வில் வந்தே ஆனாய்
ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை
நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே.."
3. அடடா மழை டா:
கார்த்திக் நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை ராகுல் நம்பியார் பாடியிருப்பார். இந்தப் பாடல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். யுவன் சங்கர் ராஜாவின் இசையை பாடலுக்கு மேலும் வலு சேர்த்திருக்கும்.
"பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு..."
4. கண்பேசும் வார்த்தைகள்:
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் இதுவும் கனா காணும் காலங்கள் என்ற இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆன பாடல்களாக அமைந்தது. இந்தப் பாடல் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.
"காற்றில் இலைகள்
பறந்த பிறகும் கிளையின்
தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம்
மறப்பதில்லை..."
5. எங்கேயோ பார்த்த மயக்கம்:
தனுஷ்-யுவன்சங்கர் ராஜா கூட்டணி என்றாலே பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இவர்கள் கூட்டணிக்கு என்னவோ அப்படி ஒரு பொருத்தம். இந்த வெற்றி கூட்டணியில் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் அமைந்த பாடல்தான் இது. இந்தப் பாடலின் வரிகளும் உதித் நாராயணனின் குரலும், இசையும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.
"கனவுகளில் வாழ்ந்த
நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்....
....மழையின் சாரல்
என்னைத் தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க..."
இவை தவிர காதல் ஆசை, அன்பே பேரன்பே போன்ற பல எண்ணற்ற பாடல்களை யுவன் சங்கர் ராஜா தனது இசையில் நமக்கு கொடுத்துள்ளார். அவற்றை அடுக்கினால் நமக்கு நேரமும் காலமும் பத்தாது.
மேலும் படிக்க: மனோ குரலில், தரமான நைட் ப்ளேலிஸ்ட்!