Shreya Ghoshal : ஸ்ரேயா கோஷலின் டாப் ஸ்வீட் மெலடீஸ்..!
இரவு பொழுதை மேலும் அழகாக அமைக்க ஸ்ரேயா கோஷலின் மெல்லிய குரலில் கேட்க வேண்டிய சில பாடல்களின் பட்டியல்.
'இசைப்பேரரசி' என்று போற்றப்படும் அளவிற்கு புகழ்பெற்ற ஒரு பாடகி என்றால் அது ஸ்ரேயா கோஷல்தான். ஆஷா போஸ்லே, லதா மங்கேஸ்கர் ஆகியோர் அளவுக்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பெங்காலி, இந்தியிலும் கலக்கி வருபவர் ஸ்ரேயா கோஷல். மேற்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைச் சேர்ந்தவர் என்று கூறும் அளவுக்கு சிறப்பாக பாடும் திறமை உடையவர். இவருடைய அழகான பல பாடல்கள் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அவற்றில் இரவு நேரங்களில் கேட்கும் வகையில் அமைந்த சில பாடல்களை என்னென்ன?
1. உருகுதே மருகுதே:
ஜி.வி.பிரகாஷ் இசையில் வெயில் திரைப்படத்தில் ஸ்ரேயா கோஷல் மற்றும் ஷங்கர் மகாதேவன் குரலில் அமைந்தப் பாடல் இது. இந்தப் பாடலில் இவர்கள் இருவரும் சிறப்பாக பாடியிருப்பார்கள். இதை கேட்கும்போது நமது மனமும் உருகும்.
'தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே வெட்கம்
உடையுதே முத்தம் தொடருதே'
2. சொல்லிட்டாலே அவ காதல:
டி.இமான் இசையில் ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கோஷல் கூட்டணியில் அமைந்த பாடல் இது. இந்தப் பாடலை பிரபு சாலமன் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்.
'இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும்
யேதும் யேதும் '
3. கண்டாங்கி கண்டாங்கி:
ஏ.ஆர் ரஹ்மானுக்கு பிறகு தமிழில் ஸ்ரேயா கோஷலுக்கு அதிக வெற்றி பாடல்களை கொடுத்தவர் இமான்தான். இமான்-ஸ்ரேயா கோஷல் கூட்டணியில் ஜில்லா திரைப்படத்தில் அமைந்த பாடல்தான். இதை நடிகர் விஜய் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பார்கள்.
'இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா'
4. அன்பே பேரன்பே:
யுவன் சங்கர் ராஜா-ஸ்ரேயா கோஷல் கூட்டணி நினைத்து நினைத்து பார்த்தால் என்ற பாடலில் தொடங்கியது. அதே கூட்டணியில் அமைந்த பாடல்தான் இது. என்.ஜி.கே திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் சித் ஶ்ரீராம் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலும் பெருமளவில் ஹிட் அடித்தது.
'ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்...'
5. முன்பே வா:
ஏ.ஆர்.ரஹ்மான்-ஸ்ரேயா கோஷல் கூட்டணி பல வெற்றி பாடல்கள் அமைந்திருந்தாலும், இந்தப் பாடல்தான் அவர்கள் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல். இதற்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் உள்ள ரசிகர்கள் இந்தப் பாடலை ரசிப்பார்கள்.
'தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான்
சாயும் தோள் மேல்வேறாரும் சாய்ந்தாலே தகுமா...'
இவை தவிர மயிலாஞ்சி, போன உசுரு, அம்மாடி என ஸ்ரேயா கோஷலின் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேலும் படிக்க: உறங்கும் வேளையில்... ராஜாவின் 5 இனிமையான பாடல்கள்!