Sivakarthikeyan on sarpatta: ’அனைவரும் பெருமை கொள்ளவேண்டிய படம் சார்பட்டா!’ - சிவகார்த்திகேயன் ட்வீட்!
இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, சஞ்சனா, கலையரசன், ஷபீர்கல்லரக்கல் உள்ளிட்டவர்கள் நடித்து அண்மையில் அமெசான் ப்ரைமில் வெளியான ’சார்பட்டா பரம்பரை’ படத்துக்கு ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் ‘இந்த படத்துக்காக உழைத்தவர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்’ எனத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
'இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு.Hats off to each and everyone involved.. It’s an amazing film pls don’t miss it’ இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
#SarpattaParambarai இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு👏👏👏 💪Hats off to each and everyone involved.. It’s an amazing film pls don’t miss it👍 @beemji @arya_offl pic.twitter.com/JHSjf3GF3d
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 29, 2021
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டரில், " சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது! வாழ்த்துகள்" என்று பதிவிட்டார். ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர்.
#SarpattaParambarai இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு👏👏👏 💪Hats off to each and everyone involved.. It’s an amazing film pls don’t miss it👍 @beemji @arya_offl pic.twitter.com/JHSjf3GF3d
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 29, 2021
முன்னதாக, இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தான் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த பின்பு, தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.