(Source: ECI/ABP News/ABP Majha)
Sivakarthikeyan Doctor Movie : ’டாக்டர் திரைப்படம் ரிலீஸ்’ சிவகார்த்திகேயன் ஆப்ரேஷன் சக்சஸ்..!
’தனது முந்தைய படங்களில் ஏகப்பட்ட வசனங்கள், ஒன் லைன் பஞ்ச்கள் என பேசியிருந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் அப்படியே மாறுப்பட்டு நடித்திருக்கிறார்’
நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருந்து தனது ‘டாக்டர்’ படம் மூலம் வெற்றி கனியை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகிய முதல் நாளிலேயே பெரிய அளவில் வெற்றி-யை குவித்திருக்கும் ‘டாக்டர்’ ஒரு டார்க் காமெடி வகை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
தனது முந்தைய படங்களில் ஏகப்பட்ட வசனங்கள், ஒன் லைன் பஞ்ச்கள் என பேசியிருந்த சிவகார்த்திகேயன், இந்த படத்தில் அப்படியே மாறுப்பட்டு நடித்திருக்கிறார். அவருக்கு வசனங்கள் மிகக்குறைவாக இருந்தாலும் மிக நிறைவானதொரு நடிப்பை வெளிப்படுத்தி அவரது ரசிகர்களையும் படம் பார்க்க வந்த பொதுமக்களையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி👍 #DoctorInTheatres from today👏👏👍💪watch it,enjoy it with your friends and family❤️👍🤗😊 pic.twitter.com/14VWXFRnsE
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 8, 2021
Human Trafficking என்ற ‘மனித கடத்தலை’ மையமாக வைத்து வைத்து சீரியசாக எடுக்கப்பட்டிருக்கும் படம் முழுக்க காமெடிகளால் களைகட்டுகிறது. அதுவும் யோகி பாபு – கிங்ஸ்லி காமெடிகள் வரும்போதெல்லாம் ரசிகர்களின் வயிறு குலுங்கும். அந்த அளவுக்கு இந்த படம் சிரிப்புக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறது.
இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா போல, ‘அட’ என நிமிர்ந்து உட்கார வைக்கும் சீன்கள் அதிகம் இல்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இதுதான் நடக்கும் என கணிக்கும் அளவுக்கான சீன்கள் இருந்தாலும் அனைத்து காட்சிகளையும் கவனம் ஈர்க்கும் வகையில் எடுத்திருக்கிறார் நெல்சன். தன்னுடைய பாணியில் இருந்து சிவகார்த்திகேயன் மாறி நடித்த ‘காக்கிச் சட்டை, வேலைக்காரன்’ போன்ற படங்கள் பெரிய அளவில் அவருக்கு ஸ்கோர் செய்து கொடுக்கவில்லை. ஆனால், இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படத்திற்கு அனிருத் இசை கூடுதல் பலம் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் கோவாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திரும் வில்லன், சாதரணமான ஆளான சிவகார்த்தியேன் போடும் பிளான்களில் எல்லாம் மாட்டிக் கொள்வது நம்பும்படியாக இல்லை. இதுபோன்ற லாஜிக்குகள் அங்காங்கே இடித்தாலும், அதனை கடந்து பார்த்தால் இது நல்ல படமாக, ரசிகர்கள் ரசிக்கும் படமாக, சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாகவும் அமைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை