Sivakarthikeyan on Vijay Devarakonda: “உங்க கூட ஒரு படம் பண்ணனும்” - மேடையில் விஜய்தேவரகொண்டாவிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
பிரின்ஸ் படத்தை பிரோமோஷன் செய்யும் வகையில் நேற்று ஹைதராபாத்தில் படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் பிரபல நடிகர் விஜய்தேவரகொண்டாவும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “ நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும். இந்த விழாவிற்கு விஜய்தேவரகொண்டா பிரின்ஸ் போலவே வந்திருக்கிறார். நான் மீடியாவில் இருந்து படிப்படியாக முன்னேறி திரைத்துறைக்கு வந்தவன். ஆனால் விஜயின் சினிமா வாழ்கை ராக்கெட் வேகத்தில் சென்றது. இவ்வளவு குறுகிய காலக்கட்டத்தில் பான் இந்தியா நடிகர் ஆவது அவ்வளவு எளிதான காரியமல்ல” என்று பேசியிருக்கிறார்.
Sivakarthikeyan 🤩 & Vijay Devarakonda 😍 talking about each other's journey
— Jessica 😍 (@AyyoEdits) October 18, 2022
Happy to see actors from different states supporting each other 👏#PRINCE🕊#Sivakarthikeyan👑 #ROWDY🥊 #VijayDeverakonda 😎
#PrinceOnOct21st #PrinceDiwali💥 pic.twitter.com/bCr7AqBGaU
தமிழ் சினிமாவில் சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படம் மெகா ஹிட் அடித்து 100 கோடி வசூலித்த நிலையில், அவரது அடுத்தப்படமான ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் மரியா ரியாபோஷப்கா, சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்திற்கு அண்மையில் சென்சார் தரப்பில் இருந்து யூ சான்றிதழ் வழங்கப்பட்டது.
View this post on Instagram
அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குளில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில் பிரின்ஸ் மிகப்பெரிய அளவில் 600 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதே போல சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்காக முதல் காட்சி காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இந்தப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.