Sivakarthikeyan: எஸ்.கே 23, அமரன் படக்குழுவினர் தந்த சர்ப்ரைஸ்: உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
அயலான் வெற்றியைத் தொடர்ந்து எஸ்கே23, அமரன் திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார்.
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த பொங்கலன்று அயலான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக அயலான் அமைந்தது. இதுவரை காமெடி, காதல், ஆக்ஷன், கமர்ஷியல் படங்கள் கொடுத்து ரசிக்க வைத்த சிவகார்த்திகேயன் சயின்ஸ் பிக்ஷன் கதை மூலம் புதிய அவதாரம் எடுத்தார்.
அயலான் 2 பிராம்மாண்டமாக உருவாக்க திட்டம்
அயலான் திரைப்படம் தெலுங்கில் வெளியான நிலையில் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றபோது, நிகழ்ச்சியில் அயலான் வெற்றி பற்றியும், அயலான் படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சிவகார்த்திகேயன் பேசி இருந்தார். அவர் பேசியதாவது, அயலான் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பும் வெற்றியும் தான் அயலான் 2 படம் உருவாக காரணம். அயலான் படத்தின் வெற்றி தான் அயலான் 2 படத்தை உருவாக்க நம்பிக்கை கொடுத்தது என்றும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகப்பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் கூறினார்.
சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்த சிறிது காலத்திலேயே தனக்கென தனி இடத்தைப் பிடித்ததுடன் அதைத் தக்க வைத்தும் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன் பிறகு அவரின் நடிப்பில் வெளியான மனங்கொத்திப்பறவையும் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுத்தது.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்தார். இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் உருவெடுத்து உள்ளார் என்றால் அது மிகை ஆகாது. அயலான் வெற்றியைத் தொடர்ந்து எஸ்கே23 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், தனது பிறந்தநாளை சிவகார்த்திகேயன் இன்று படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமரன் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு
சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்கு அமரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் நிறுவனம் அமரன் படத்தின் போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Happy Birthday @Siva_Kartikeyan! Your special day is celebrated across borders and cherished in all our hearts. #Amaran #HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) February 17, 2024
A Film by @Rajkumar_KP@ikamalhaasan #Mahendran @gvprakash @Sai_Pallavi92… pic.twitter.com/M5XlNJPFXY
மேலும் படிக்க
Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!