(Source: ECI/ABP News/ABP Majha)
Sivaangi : சிவாங்கியின் உழைப்பு இப்படி.. CWC4 பயணம் பற்றி செஃப் சரவணன்
ஒரு வேளை சிவாங்கி டைட்டில் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தால் அவளுக்கு சேனல் ஃபேவரிசம் காட்டியது என சொல்லிவிடுவார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி ஷோக்களுக்குமே சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கும். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரின் ஃபேவரட் ஷோ என்றே சொல்லலாம். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனின் பைனல்ஸ் நேற்று கோலாகலமாக முடிவடைந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக கலக்கி ஏராளமான ரசிகர்களை ஈர்த்த சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி இந்த நான்காவது சீசனில் குக் என்ற ப்ரோமோஷன் பெற்று மிகவும் சிறப்பாக சமைத்து நடுவர்களை அசத்தி வந்தார். இறுதி சுற்றுக்கு தேர்வான சிவாங்கிதான் டைட்டில் வின்னராக தேர்ந்து எடுக்கப்படுவார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் சிவாங்கி இறுதி சுற்றில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படாதது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கியின் பயணம் குறித்து அவரின் மென்டர் செஃப் சரவணன் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். கோமாளியாக சிவாங்கியை கொண்டாடிய ரசிகர்களால் அவரை ஒரு குக்காக பெரிய அளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக சிவாங்கி மிகவும் கடினமாக தன்னை தயார்படுத்திக்கொண்டார். இந்த போட்டியில் ஒரு வேளை அவர் டைட்டில் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தால் அவளுக்கு சேனல் ஃபேவரிசம் காட்டியது என சொல்லிவிடுவார்கள். ஒன்னுமே தெரியாமல் இருந்த ரொம்ப க்யூட்டா கோமாளியாக இருந்த பொண்ண அவரின் ரசிகர்கள் ரொம்ப மிஸ் பண்ணி இருக்கலாம். அதனால் அவரை ஒரு குக்காக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். இதுதான் அவர் மீது நெகடிவ் கருத்துகள் வந்ததற்கு ஒரு வேளை காரணமாக இருக்கலாம்.
உண்மையில் ஒரு தனிப்பட்ட டிஷ்ஷுக்கு ட்ரைனிங் மட்டுமின்றி இந்தியன், கான்டினென்டல், சைனீஸ், சவுத் இந்தியன் என அனைத்து பிரிவுகளிலும் ட்ரைனிங் எடுத்து கொள்வதற்காக அவர் எடுத்த சிரமம் பற்றி மக்களுக்கு தெரியாது. இது கூட சிவாங்கிக்கு ட்ரோல் வருவதற்கு காரணமாக இருந்து இருக்கலாம்.
ஒரு காமெடியன் திடீரென ஒரு சீரியஸ் ரோலில் நடித்தால் மக்கள் உடனே எடுத்துக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதே தான் சிவாங்கி பயணமும். "ஒரு சில சமயம் சிவாங்கியே கூட நான் தப்பு பண்ணிட்டேன் அண்ணா. இது நான் பண்ணி இருக்கக்கூடாது" என கூறியுள்ளாராம் நெகடிவ் விமர்சனங்களை, எதிர்கொள்வதில் மெச்சூரிட்டி அதிகமாக இருந்தது என்றார்
சிவாங்கி எந்த ஒரு டிஷ் செய்தாலும் அதில் ஏதாவது இம்ப்ரூவ் செய்ய மிகவும் ஆசைப்படுவார். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை அவர் வேறு எந்த ஒரு கமிட்மென்ட்டும் வைத்து கொள்ளாமல், முழுக்க முழுக்க ட்ரைனிங்கில் மட்டுமே ஈடுபட்டு இருந்தார். சிவாங்கி சில சமயங்களில் பிளாங்க் அவுட் எல்லாம் ஆகி இருக்காங்க. அனைவருக்கும் அதுவும் சகஜமான ஒன்றுதான். சிவாங்கி ஒரு குழந்தை போலதான். அவங்களோட இன்னசென்ஸ் ரொம்ப அழகா ரசிக்க வைக்கும்.
இப்படி சிவாங்கியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காக அவரின் பயணம் பற்றி செஃப் சரவணன் பேசியிருந்தார்.