SK Prince Update: சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் அப்டேட் நாளை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பேவரைட் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Next Announcement 📣 of #PRINCE 👑 tomorrow at 10.45AM 🇮🇳🕊🇬🇧@Siva_Kartikeyan@anudeepfilm #MariaRyaboshapka @Premgiamaren #Sathyaraj @MusicThaman @manojdft @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies
— Suresh Productions (@SureshProdns) June 20, 2022
இதனிடையே தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பேமிலி எண்டெர்டெயினராக உள்ள இப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
Get Ready for another Exciting Announcement 📣 of @siva_kartikeyan's #PRINCE 👑
— Vamsi Kaka (@vamsikaka) June 20, 2022
Loading Tomorrow at 10.45AM
🇮🇳🕊🇬🇧@anudeepfilm #MariaRyaboshapka @Premgiamaren #Sathyaraj @MusicThaman @manojdft @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies pic.twitter.com/nqb49aB4qX
இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் அடுத்த அப்டேட் நாளை (ஜூன் 21) காலை 10.45 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை படத்தின் விநியோக உரிமை குறித்த அறிவிப்பாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்