Dulquer salmaan: ‘இது இங்குள்ள காதல் அல்ல... உலகளாவிய காதல்...’ துல்கரின் சீதாராமம் ஸ்பெஷல் பைட்!
சீதா ராமம் கதையில் நடித்தது தனக்கு கிடைத்த அதிஷ்டம் என்று நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார்.
சீதா ராமம் கதையில் நடித்தது தனக்கு கிடைத்த அதிஷ்டம் என்று நடிகர் துல்கர் சல்மான் பேசியுள்ளார்.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேசியிருக்கும் அவர், “ இந்த மாதிரியான கதையில் நான் நடித்தது எனக்கு கிடைத்த அதிஷ்டம்தான். இது ஒரு தனித்துவமான கதை. இந்தக்காலத்தில் சொல்லப்படும் காதல் கதைகளை போல இது இருக்காது. இந்தப்படம் உலகளாவியது. திரையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.” என்று பேசினார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.
View this post on Instagram
நடிகை மிருணாள் தாகூர் பேசும் போது, “ என்னை இந்த மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாகவே உணர்கிறேன். இந்தபபடம் பெரியத்திரையில் பார்க்க வேண்டிய படம். அனைத்து அம்சங்களை கொண்ட காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப்படம் மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார்.
View this post on Instagram
முன்னதாக, இயக்குநர் ஹனு ராகவ்புடி யக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம் ‛சீதா ராமம்’.தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் வருகிற நாளை (ஆக 5) - இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
அதில் திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதனுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் இடையே நடந்த விவாதம் கீழே:-
சென்னையில் சீதா ராமம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துல்கரிடம், “படத்தில் உங்க பேரு ராம் சொன்னீங்க.. பட தலைப்பில் இருக்கு.. ராமம்னா என்ன..? என்று கேட்டார்.. அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “ அவங்க ஒரு கதையை பற்றி சொல்லும்போது இரண்டையும் ஒன்றாக சேர்த்து சீதா- ராமம் என்று வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்..
அதனைத்தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இல்லைங்க..எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. அது சீதாராமம் மா.. இல்லை சீதா நாமமா.. சீதா ராமனா.. எனக்கு ராமம்க்கு அர்த்தம் தெரிஞ்சாவணும் என்று கேட்டார்..
அதற்கு பதிலளித்த துல்கர், “ நான் அதை எழுதல. அதை பற்றி சொல்றதுக்கு என்னோட இயக்குநர் இங்க இருந்திருக்கணும். ஆனால் அவரும் இங்கு இல்ல.சூழ்நிலை இப்படி இருக்க நான் என்ன பண்ண முடியும்..” என்றார்.
தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன்.. அப்படினா அது என்னன்னு தெரியாமலேயே நடிச்சீட்டீங்களா என்று கேட்க.. நான் இந்தப்படத்தில் கமிட் ஆகும் போகும் போது படத்திற்கு பேரு வைக்கல.. ஒரு மாதத்திற்கு முன்னாடிதான் பேரு வைத்தார்கள்” என்றார்.