கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. சிறகடிக்க ஆசை நடிகர் மனைவிக்கு என்ன பிரச்னை!
பொன்னி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை வைஷ்ணவி கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வெற்றி வசந்த் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்த வைஷ்ணவியை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பு நடிகை வைஷ்ணவி சீரியலில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில், அவர் கதறி அழுது வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவில் பேசிய வைஷ்ணவி, ஒருவரை தவறாக காட்ட முயற்சிப்பதை முதலில் நிறுத்துங்கள் என கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில், அம்மா, அப்பாவை விட்டு இங்கு வந்து இரண்டு சீரியலில் நடித்து கிட்டத்தட்ட 6 வருஷம் உட்கார்ந்து சாப்பிடவே கஷ்டமாக இருக்கும். நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். இப்போ நான் கல்யாண வாழ்க்கையில் எனக்கு ஒரு அமைதி வேண்டும் என்பதற்காக பிரேக் எடுத்திருக்கேன் அவ்வளவுதான். நீ உன் புருஷன் காசுல உக்கார்ந்து சாப்புடுற தண்டசோறு தான நீ என பலரும் கேட்கிறார்கள்.
ஆமா, என் புருஷன் சம்பாதிக்கிறான் நான் சாப்புடுறேன். அதைவிட்டுட்டு நான் என்ன வேறொருவர் காசுலயா சாப்புடுறேன். அதற்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை தவறாக பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்துடன் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நடிகை வைஷ்ணவியை யார் இப்படி கூறியது என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஒரு வேளை அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
View this post on Instagram





















