Maanaadu Box Office: பாக்ஸ் ஆஃப் கலெக்சனில் நம்பர் 1 .. சிங்கப்பூரில் சாதனைப் படைத்த மாநாடு..
Maanaadu Box Office Collection: சிங்கப்பூரில் வெளியான புதுப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மாநாடு படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Maanaadu Box Office Collection: சிங்கப்பூரில் வெளியான புதுப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மாநாடு படம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல மலேசியாவில் வெளியான டாப் 10 படங்களில் மாநாடு படம் 2 வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் நல்ல வரவேற்பை பெற்ற மாநாடு திரைப்படம் இன்று மாலை கேரளாவிலும் வெளியாக உள்ளது.
#Maanaadu debuts at No.1 in #Singapore Box office..@SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah pic.twitter.com/RK7ytI1neu
— Ramesh Bala (@rameshlaus) November 26, 2021
#Maanaadu registered a super opening on day one in #TamilNadu, #Malaysia, and #Singapore. Trends show that the film is picking up in #Kerala from evening. Congratulations @vp_offl, @SilambarasanTR_ , @iam_SJSuryah, @kalyanipriyan and team! Day one numbers in Tamil Nadu shortly. pic.twitter.com/gRGQwcmeiH
— Rajasekar (@sekartweets) November 26, 2021
. @SilambarasanTR_ 's #Maanaadu debuts strongly in #Malaysia
— Ramesh Bala (@rameshlaus) November 26, 2021
At No.2 in #Malaysia 's #GSC Multiplex Chain of Theaters..@vp_offl pic.twitter.com/StROPTS3Yt
முன்னதாக, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்.ஜே. சூர்யா, மஹத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், ஸ்னீக் பீக்கும் ரசிகர்களிடையே வைரலானது. இதற்கிடையே மாநாடு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன் ட்வீட் செய்த மாநாடு தயாரிப்பாளர் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பிரச்னை சரிசெய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்று காலை வரை படம் பிரச்னையிலேயே இருந்தது. தொடர்ந்து காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், படம் வெளியாகுமா இல்லை வெளியாகாதா என்ற குழப்பம் நீடித்தது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், படம் வெளியிடப்பட்டது.