(Source: ECI/ABP News/ABP Majha)
Simbu : 'தக் லைஃப்' டப்பிங் பணியை முடித்த சிம்பு... அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வம்
Simbu : 'தக் லைஃப்' படத்தின் டப்பிங் பணியில் சிம்பு ஈடுபட்ட போது எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படத்திற்கு பிறகு சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சில சண்டை காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டப்பிங் பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.
துணை கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஹெலிகாப்டரில் இருந்து கிழே விழுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே அவர் நடிக்க வேண்டிய மீதம் உள்ள காட்சிகள் தற்போது படமாக்கப்பட உள்ளது.
நடிகர் சிம்பு இப்படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. டப்பிங் பணிகளில் சிம்பு ஈடுபட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
இப்படத்தை முடித்த பிறகு எஸ்டிஆர் 48 படத்தின் பணிகளை தொடங்குவார் சிம்பு என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.