மேலும் அறிய

19 Years Of Manmadhan : முடிவடையாமல் நீளும் சர்ச்சை...19 ஆண்டுகளை கடந்துள்ள சிம்புவின் மன்மதன்..

சிலம்பரசன் நடித்து வெளியான மன்மதன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மன்மதன்

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் மன்மதன். சிம்பு,  ஜோதிகா, கவுண்டமனி,  சிந்து தொலானி சந்தானம் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள், யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிரைம் த்ரில்லராக உருவாகி இருந்த இந்தப் படத்தில் சிலம்பரான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மன்மதன் படம்  நல்ல  வெற்றையைப் பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக நிறைய மாற்றுக் கருத்துக்கள் ரசிகர்களுக்கு இருந்தன. மேலும் படத்தின் இயக்குநர் முருகன் சில ஆண்டுகள் முன்பாக படம் குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

 நெகட்டிவ் விமர்சனம்

ஆண்களை காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றும் பெண்களை கொடூரமாக கொலை செய்பவராக சிலம்பரசன் இந்தப் படத்தில் நடித்திருந்தார். பெண்களுக்கு எதிரான வெறுப்பை கொட்டுவதாக இந்தப் படத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப் பட்டன. மேலும் பெண்களைப் பற்றிய மேம்போக்கான ஆணாதிக்க கருத்துக்களை இந்தப் படம் முன்வைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இயக்குநர் கிளப்பிய சர்ச்சை

மன்மதன் படத்திற்கு எழுந்த மிகப்பெரிய சர்ச்சை என்றால் படத்தில் இயக்குநர் முருகன் சில ஆண்டுகளுக்கு முன்  நேர்காணல் ஒன்றில் பேசியது. மன்மதன் திரைப்படத்தின் கதையை தான் முதலில்  நடிகர் அஜித் குமாரிடம் சொன்னதாகவும் அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால் இந்தக் கதையை சிலம்பரசனிடம் தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்திடம் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்க சம்மதித்த அவர் முன்பணமாக முருகனுக்கு 25 ஆயிரம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறது இயக்குநர் முருகனுக்கு அழைத்த தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சிலம்பரசன் தனது பெயரை போட ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் அம்மாவிடம் இயக்குநர் முருகன் அழைத்து பேசியபோது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசியதாகவும் சிம்புவின் பெயரை போடாவிட்டால்  இந்தப் படத்தை இயக்க முடியாது என்று அவர் கூறியதாக முருகன் தெரிவித்தார்.

 தன்னுடைய முதல் படம் என்பதால் தான் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் 14 ஆண்டுகள் கழித்து இதை வெளியில் சொன்ன முருகன்  தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சிம்பு வழங்குவதாக சொன்னதாகவும் கூறினார். ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதையை தான் அதர்வாவிடம் சொல்ல இருந்ததாகவும் ஆனால் அது நடக்காமல் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று 19 ஆண்டுகளை கடந்துள்ள மன்மதன் திரைப்படத்திற்குப் பின் இப்படியான பல்வேறு சர்ச்சைகள் தீர்க்கப்படாமல் நீடித்து வருகின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Breaking News LIVE: ஜாமினில் வெளிவந்த கெஜ்ரிவால் இன்று பிரமாண்ட பேரணி..!
Breaking News LIVE: ஜாமினில் வெளிவந்த கெஜ்ரிவால் இன்று பிரமாண்ட பேரணி..!
Kylian Mbappe: பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..Extra Price in TASMAC |’’அநியாயம் பண்றாங்க’’பாட்டிலுக்கு 10 ரூபாய் EXTRA! புலம்பும் மதுபிரியர்கள்KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Breaking News LIVE: ஜாமினில் வெளிவந்த கெஜ்ரிவால் இன்று பிரமாண்ட பேரணி..!
Breaking News LIVE: ஜாமினில் வெளிவந்த கெஜ்ரிவால் இன்று பிரமாண்ட பேரணி..!
Kylian Mbappe: பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் அணியில் இருந்து விலகும் கைலியன் எம்பாப்பே.. ரியல் மாட்ரிட்டில் இணைகிறாரா..?
6 Airbag Cars: உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
உசுரு முக்கியம்பா..! 6 ஏர் பேக்குகளை கொண்ட டாப் 10 மலிவு விலை கார்களின் லிஸ்ட் இதோ..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
MI Vs KKR, IPL 2024: கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வேகத்தை தடுக்குமா மும்பை? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Embed widget