SIIMA Awards Winners: மூணுமே ஒன்னுக்கொன்னு சளைச்சது இல்ல.. சைமா விருதுகளை வென்ற டாப் 3 நடிகர்கள்!
சைமா விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வெவ்வேறு பிரிவுகளில் வென்ற நடிகர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
சைமா விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வெவ்வேறு பிரிவுகளில் வென்ற நடிகர்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
2021 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடை பெற்றது. (10-09-2022) மற்றும் (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், யோகிபாபு, சிலம்பரசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
நேற்று விருது நிகழ்ச்சியில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விருதுகள் வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து தற்போது சைமா விருதுகளை வென்ற தமிழ் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் சிறந்த முன்னணி நடிகருக்கான விருது டாக்டர் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா அலை சற்று குறைந்த பிறகு விஜயின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் செய்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்தார். அனிருத் இசையமைத்து இருந்த இந்தப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது.
View this post on Instagram
சிறந்த நடிகருக்கான விருது மாநாடு படத்திற்காக நடிகர் சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த இந்தப்படம் பல கட்டபிரச்னைகளுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். சிலம்பரசனுக்கு கம்-பேக் படமாக அமைந்த இந்தப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.
View this post on Instagram
சிறந்த முன்னணி நடிகருக்கான க்ரிட்டிக்ஸ் விருது நடிகர் ஆர்யாவிற்கு சார்பட்டா பரம்பரை படத்திற்காக வழங்கப்பட்டது.
View this post on Instagram
பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய வெற்றியை இந்தப்படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.