மேலும் அறிய

SIIMA Awards 2022 Winners: கெத்து காட்டிய புஷ்பா.. நின்று ஆடிய விக்ரம்.. சைமா விருதுகள் முழு லிஸ்ட்!

SIIMA Awards 2022 Winners List: தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

2022 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று (10-09-2022) மற்றும் இன்று (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெறக்கூடிய இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்  தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சைமா விருதுகளை வென்ற பிரபலங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

தெலுங்கு சினிமாவை பொருத்த வரை சிறந்த படத்திற்கான விருது அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திற்கும், சிறந்த இயக்குநருக்கான விருது அந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாருக்கும், சிறந்த நடிகருக்கான விருது அதில் நடித்த அல்லு அர்ஜூன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

சிறந்த நடிகருக்கான கிரிட்டிக்ஸ் விருது ஜதி ரத்னலு படத்திற்காக நவீன் பாலிஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. யூத் ஐகான் விருது நடிகைகளில் பூஜா ஹெக்டேவுக்கும், நடிகர்களில் விஜய் தேவரகொண்டாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கிராக் படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருது புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது உப்பென்னா படத்தை இயக்கிய புச்சி பாபு சனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி பாடலை எழுதிய சந்திரபோஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது புஷ்பா படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது உப்பென்னா படத்தில் நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SIIMA (@siimawards)

கன்னட சினிமா: 

கன்னட சினிமாவை பொருத்த வரை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு யுவரத்னா படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

 

சிறந்த நடிகைக்கான விருது மதகஜா படத்தில் நடித்த ஆஷிகா ரங்கநாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது த்ரிஷ்யா 2 படத்திற்காக ஆரோஹி நாராயணுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லனுக்கான விருது ஹீரோ படத்திற்காக பிரோமோத் ஷெட்டிக்கு வழஙகப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget