3 BHK Trailer : குடும்பஸ்தனாக மாறிய சரத்குமார்.. நீங்க டிராவிட் ஃபேன், நான் தோனி ஃபேன்.. ரசிகர்களை கவர்ந்த 3BHK டிரைலர்
சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள 3BHK திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஶ்ரீ கணேஷ். இப்படத்தில் இடம்பெற்ற வசனமும், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தொடர்ந்து அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் நிதி பற்றாக்குறையால் படப்பிடிப்பு நின்று பிறகு தொடங்கி ரிலீஸ் ஆனது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 8 தோட்டாக்கள் படத்தை போன்ற வெற்றியை பெற ஶ்ரீ கணேஷ் காத்திருக்கிறார்.
3BHK டிரைலர்
இயக்குநர் ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 3BHK. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டிரைலரில் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதை பிரதானமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். சூர்ய வம்சம் ஜோடியான சரத்குமார், தேவயானியை நடிக்க வைத்து ரசிகர்களிடம் கைதட்டுவார் என்பது உறுதியாகியுள்ளது.
வீடு ஒருவரின் கனவு
சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கும் வாசுதேவனுக்கு (சரத்குமார்) சொந்தமாக வீடு வாங்கி அதில் வாசுதேவன் ஃபேமிலி என்ற வாசகத்த பதிவிட வேண்டும் என்பதே ஆசை. ஒரு வீடு வாங்குவதற்காக குடும்பங்கள் படும் கஸ்டத்தையும், பல அவமானங்களை தாண்டி வீடு வாங்கினார்களா இல்லையா என்பதை கதையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஶ்ரீ கணேஷ். இன்றைய சூழலில் சென்னையில ஒரு வீடு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை ஒட்டுமொத்த முதலீடாக வீட்டிற்கு செலவிடும் தாய் , தந்தையர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியே கண்முன்னே நிறுத்திகிறது 3 பிஹெச்கே.
கண்ணீரை வரவழைத்த சரத்குமார்
இப்படத்தின் டிரைலரில் இதுவரை கண்டிராத ஒரு சரத்குமாரை காண முடிகிறது. பல படங்களில் தனது கைகளால் வில்லன்களை பந்தாடிய சரத்குமார் ஒரு சாந்தமான அப்பாவாகவும், தனது குடும்பத்திற்காக கனவுகளை சுமக்கும் குடும்பத்தலைவனாக பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கண்ணீரில் கசிய விட்டுள்ளார். தந்தையின் கனவிற்காக சித்தார்த், மீதா ரகுநாத்தும் கனவை சுமக்கும் காட்சிகளும் இடம்பிடித்திருக்கின்றன. இந்த டிரைலரில் வரும் வசனங்களும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதே போன்று ஒரு குடும்ப தலைவியாக தேவயானி செய்யும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. 80 காலகட்டத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா வீடு படத்தின் மூலம் பல பிரச்னைகளை பேசியிருப்பார். அதேபோன்று இன்றைய சூழலில் ஒரு மிடில் கிளாஸ் பையன் சந்திக்கும் பிரச்னையும், ஒரு குடும்பத்தின் கனவை பிரதிபலிக்கும் படமாக 3BHK இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனம் ஈர்க்கும் வசனங்கள்
அதாவது, நம்ம அக்கவுண்டை பார்க்க வேண்டாம். பாடிலாங்குவேஜை பார்த்தே எடை போடுவாங்கப்பா என்று சரத்குமாரை பார்த்து மீதா கூறும் வசனங்களும் சரி, என்னை மாதிரி நீயும் ஆகிடாதே என்று கூறி கலங்கும் சரத்குமாரிடம் நீங்க டிராவிட் ஃபேன், நான் தோனி ஃபேன் பா என்று சித்தார்த் கூறும் போது எமோஷனல் டச்சிங்காக இருக்கிறது. மேலும் ஏன் வாசுதேவன் வீடு வீடு இருக்கீங்க என்று கேட்கும்போது சரத்குமார் பொறுமையாக வீடுங்குறது மரியாதை அதான்ல என்று கூறுவதும் நெஞ்சை கசிய வைக்கிறது. இதையும் தாண்டி யோகி பாபு சூர்யவம்சம் படத்தை பார்த்தது மாதிரு இருக்குபா என்று கூறும் வசனங்களும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளது. மொத்ததில் 3BHK டிரைலர் ஒரு குடும்பத்தின் கனவு என்றே கூறலாம். டூரிஸ்ட் ஃபேமிலி வரிசையில் இப்படமும் மக்களின் கவனத்தை பெறும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





















