Siddhaanth Vir Surryavanshi Death : பிரபல சின்னத்திரை நடிகர் அதிர்ச்சி மரணம்.. ஜிம்மில் சுருண்டு விழுந்து உயிரிழப்பா? என்ன காரணம்?
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
குசும், வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ண் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி. 46-வது வயதான இவர் இன்று உயிரிழந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
Actor Siddhaanth Vir Surryavanshi, 46, died of heart attack while working out in the gym. He was married to Russian model, Alesia Raut.
— suryanshi pandey (@UnfilteredSP) November 11, 2022
How many such deaths will wake us up to do a concrete research around such sudden deaths?#siddhant pic.twitter.com/cjigkLkCY7
இவருக்கு, சூப்பர் மாடல் அலெசியா ராட் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. நடிகர் ஜெய் பானுஷாலி இன்ஸ்டாகிராமில் சித்தாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சித்தாந்த் மிக விரைவில் சென்றுவிட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், ஆனந்த் சூர்யவன்ஷி என்று அழைக்கப்படும் சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி, குசும் நாடகத்தின் மூலம் அறிமுகமானார். பல நாடகங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். கசௌதி ஜிந்தகி கே, கிருஷ்ணா அர்ஜுன், க்யா தில் மே ஹை போன்ற தொடர்களில் இவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இவரது கடைசியாக, கியூன் ரிஷ்டன் மெய் கட்டி பட்டி மற்றும் ஜித்தி தில் ஆகியவற்றில் நடித்திருந்தார். சித்தான்த் முன்பு ஈரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரை 2015 இல் விவாகரத்து செய்தார். பின்னர், இவர் 2017 இல் அலெசியாவை மணந்தார். சித்தாந்தின் முதல் திருமணத்தில் பிறந்த மகளுடனும் அலேசியாவுக்கு முந்தைய திருமணத்திலிருந்து பிறந்த மகனுடனும் இந்த தம்பதி வாழ்ந்து வந்தனர்.
இளம் நடிகர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகிவிட்டது. பிரபல கன்னட திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 46.
Actor Siddhaanth Vir Surryavanshi passes away
— ANI Digital (@ani_digital) November 11, 2022
Read @ANI Story | https://t.co/zKk3kPLgw0#Siddhaanth #SiddhaanthVirSurryavanshi #KasautiiZindagiiKay pic.twitter.com/jkpE1lvTIu
வாழ்க்கை முறை காரணமாகவும் மன அழுத்தம் காரணமாகவும் இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.