Kamal Haasan: அப்பா என்னை மிஸ் பண்ணா இன்ஸ்டால இதை செய்வாரு.. கமல்ஹாசன் பற்றி ஸ்ருதி பகிர்ந்த சீக்ரெட்!
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு அசட்டு பழக்கமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு ரகசியத்தை ஸ்ருதி ஹாசன் வெளிப்படுத்தி உள்ளார்.

கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுக்கும் இடையிலான தந்தை - மகள் உறவு மிகவும் அழகானது. தனது தந்தையைப் பற்றி எல்லா இடங்களிலிம் பெருமையாக பேசும் ஒருவராக ஸ்ருதி ஹாசன் இருந்துள்ளார். அதே போல் தனது மகளுடன் ஒரு நண்பன் ஸ்தானத்தில் எப்போது உரையாடும் ஒருவராக கமல் இருந்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இசையமைத்து இயக்கிய இனிமேல் பாடலுக்கு கமல் வரிகள் எழுதியிருந்தார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு கமல் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை ராஜ்கமல் யூடியுப் முன்னதாகப் பகிர்ந்தது.
காதலைப் பற்றி கமல்
பிரிவதும் சேர்வதும் ஆகிய சுழற்சியை மையப்படுத்தி இனிமேல் பாடல் உருவானது . இந்தப் பாடலை எழுதிய அனுபவம் பற்றி ஸ்ருதி கமலிடம் கேட்டார் " இங்கிருந்து கொஞ்சம் தள்ளிப்போனால் கவிஞர் கண்ணதாசனின் வீடு இருக்கிறது. அப்படியான கவிஞர்கள் சுவாசித்த அதே மூச்சு காற்றைதான் நானுக் சுவாசிக்கிறேன் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. எழுதுவது என்பது எழுதுவது மட்டுமில்லை நிறைய படிப்பதும் தான் என்பதை எனக்கு கற்றுத் தந்தவர் கண்ணதாசன் தான். காதலில் இணைவதும் பிரிவது பற்றியும் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் எழுதியுள்ளார். இன்றைய தலைமுறை காதல் என்பது ஆண் பெண் என இரு தரப்பினரை பற்றியும் பேசுகிறது.” என்று இனிமேல் பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி கூறினார்.
மிஸ் பண்ணா ரீல்ஸ் அன்னுப்புவார்
#Inimel Jamming Journey Begins!
— Raaj Kamal Films International (@RKFI) April 27, 2024
➡️ https://t.co/2IeMMe4tBv#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey @ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM@IamDwarkesh @bhuvangowda84 @philoedit #SriramIyengar @yanchanmusic @SowndarNallasa1 @gopiprasannaa… pic.twitter.com/AHaiSXsOEb
” நீங்க எப்போவாச்சும் என்ன மிஸ் பண்ணுவீங்களா?“ என்று தனது தந்தையிடன் ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு“ கண்டிப்பா மிஸ் பண்ணுவேன். ரோட்ல சின்ன குழந்தைங்க நடந்துபோகும்போது, பார்த்த உடனே எனக்கு உன்னுடைய ஞாபகம் தான் வரும் ஆனால் அதை வெளிப்படையா சொல்லமாட்டேன்” என்று கூறினார். உடனே ஸ்ருதிஹாசன் “அதனால எனக்கு ரீல்ஸா அனுப்பிடுவீங்க” என்று கமலுக்கு கெளண்டர் கொடுக்கிறார்.
தனது வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிகளை நடிப்பின் வழியாக வெளிக்காட்டிய கமல் தன் சொந்த மகளை மிஸ் செய்தால் அதை நேரடியாக சொல்லாமல் ரீல்ஸாக அனுப்புவார் என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான்.

