மேலும் அறிய

Nayanthara Shraddha Srinath | நயன்தாரவுக்கு பதில் ஷ்ரத்தா! - எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பின்னணி!

நயன்தாரா யுவராஜின் கதையில் நடிக்க க்ரீன் சிக்னல் கொடுத்தாராம்.

தமிழ் சினிமாவில் நாயகி ஒருவர் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார் என்றால் அது ‘நயன்தாராதான்’. அந்த அளவுக்கு  தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நயன்தாரா. நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி , சம்ந்தா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குகிறார். அவர் நயன்தாராவின் காதலர் என்பது நாம் அறிந்ததே. நயன்தாரா சமீப காலமாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.அப்படித்தான் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நயன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து தற்போது நயன்தாரா தற்போது விலகிவிட்டாராம். அதற்கு காரணம்  அவரின் பாலிவுட் எண்ட்ரி என கூறப்படுகிறது.


Nayanthara Shraddha Srinath | நயன்தாரவுக்கு பதில் ஷ்ரத்தா! - எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பின்னணி!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் தாமதமானதால் , யுவராஜ் படத்திற்காக ஒதுக்கிய தேதிகளையும் அட்லீ படத்திற்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாராம் நயன்தாரா. அதனால் படத்திலிருந்து பின்வாங்கியதாக தெரிகிறது. யுவராஜ் வடிவேலுவை வைத்து எலி, தெனாலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்திற்கு போல்டாக நடிக்கும் நடிகை தேவைப்படும் என்பதால் , அதற்கு ஏற்ற மாதிரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருப்பார் என அவரை தயாரிப்பாளர் தரப்பு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் , மாதவன் படமான விக்ரம் வேதாவில் நடித்து பிரபலமானவர். அவருக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவிற்கு பிடித்துதான் யுவராஜ் படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்தாராம், ஆனால் சூழல் அவரை படத்திலிருந்து விலகும்படியாக்கிவிட்டது. இந்தநிலையில் நயன்தாராவிற்கு மாற்றாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் களமிறங்கயிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


Nayanthara Shraddha Srinath | நயன்தாரவுக்கு பதில் ஷ்ரத்தா! - எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பின்னணி!
அடுத்ததாக பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் பிரித்திவிராஜும் இணையும் கோல்ட் படத்தில் நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கட்டிப்போட்டுள்ளார். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஒரு நிகழ்ச்சிஒன்றில் நயன் தாராவே தெரிவித்திருந்தார். கொரோனா சூழல் சரியானவுடன் திருமண வேலைகள் தொடங்கும் என தெரிவித்திருந்தார் விக்னேஷ் சிவன். விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Embed widget