Shraddha Kapoor: கோடிகள் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கிய ஷ்ரத்தா கபூர்.. வாயைப் பிளக்கும் பாலிவுட் வட்டாரம்!
‘ஆஷிக்கி 2’ எனும் ஒற்றைப் படம் மூலம் பாலிவுட் தாண்டி ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா கபூர்.
பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் கோடிகள் மதிப்புள்ள சொகுசு கார் வாங்கியுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷரத்தா கபூர். இவர் ஆஷிக்கி 2 எனும் ஒற்றைப் படம் மூலம் பாலிவுட் தாண்டி ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ஷரத்தா கபூர், ரூ.4.50 கோடி மதிப்பிலான காரை வாங்கி பாலிவுட் வட்டாரத்தினரை வாயைப் பிளக்க வைத்துள்ளார்.
"Upar nahi, yahaan pe laga sakte hai," 😅 It's a 4 crore ki car, gotta be super careful innit. 😁 Shraddha being muy particular about the paintwork as she and Panditji welcome her Lamborghini Huracan Tecnica. #filmyape #bollywood #ShraddhaKapoor #lamborghini #lamborghinihuracan pic.twitter.com/7L5IECNcpY
— Filmyape (@Filmyape) October 25, 2023
இதற்கு முன்னதாக ஷரத்தா கபூரிடம் எளிமையான கார்கள் மட்டுமே இருந்தன. அதில், மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மாருதி சுசுகி விட்டாரா மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்கள் மட்டுமே ஷரத்தா கபூரிடம் இருந்து வந்தன. இந்த நிலையில், மிகவும் விலை உயர்ந்த உயர் ரக காரை ஷரத்தா கபூர் வாங்கியுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா மாடல் காரை வாங்கியுள்ளார். பல சிறப்பம்சம் கொண்ட இந்த காரின் விலை ரூ.4.50 கோடி என கூறப்படுகிறது.
நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விலை உயர்ந்த காரை ஷரத்தா கபூர் வாங்கியுள்ளார். சக்தி வாய்ந்த 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 எஞ்சின் பொறுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 640 ஹெபி திறன் கொண்டதாக இருக்கும் வகையில் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 7 ஸ்பீடு இரட்டை கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஷராத்தா கபூர் வாங்கிய லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா மணிக்கு 100 கிலோ மீட்டரை 3.2 விநாடிகளில் எட்டக்கூடியது. இதன் டாப் ஸ்பீடில் மணிக்கு 325 கிலோ மீட்டர் சீறி பாயும் லம்போர்கினி ஹுராகேன் டெக்னிகா காருக்கு இந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உண்டு.
இந்த நிலையில் தன் சிகப்பு நிற லம்போர்கினி காரில் ஷரத்தா கபூர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பல பிரபல கிரிக்கெட் வீரர்கள், திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் லம்போர்கினி காரை வைத்திருக்கும் நிலையில் இந்த வரிசையில் தற்போது ஷரத்தாவும் இணைந்துள்ளார்.
மேலும் படிக்க: 4 Years Of Kaithi: எல்சியூவின் தொடக்கப்புள்ளி.. ‘கைதி’ வெளியாகி 4 ஆண்டுகள்.. லோகேஷின் புத்திக் கூர்மை இதுதான்!