4 Years Of Kaithi: எல்சியூவின் தொடக்கப்புள்ளி.. ‘கைதி’ வெளியாகி 4 ஆண்டுகள்.. லோகேஷின் புத்திக் கூர்மை இதுதான்!
விக்ரம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ரசிகர்களை தியேட்டர்களுக்கு செல்வதற்கு முன்பு கைதியைப் பார்க்கும்படி கேட்டு கொண்டார்.
விஜய்யின் ஆக்ஷன் த்ரில்லர் மூவியான லியோ, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU)ல் ஒரு பாகமா என்பது பற்றி பல மாதமாக விவாதிக்கப்பட்டது. இறுதியில், இது LCU - வின் ஒரு பகுதி என்றும், கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களை தொடர்பு கொண்ட மூன்றாவது படம் என்றும் தற்போது விடை கிடைத்துள்ளது.
எல்சியூ மூலம் தமிழ் சினிமாவில் யாராலும் செய்ய முடியாததை லோகேஷ் கனகராஜ் செய்தார். அவர் தனது திரைப்படங்கள் மூலம், தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்களை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
எல்சியூ எப்படி இணைந்தது..?
'கைதி', 'விக்ரம்' படங்களைப் பார்த்திருப்பீர்களேயானால், லோகேஷ் கனகராஜ் அவற்றை முடிவை முழுமையாக முடிக்காமல் அடுத்த பாகம் அல்லது திரைப்படத்திற்கான வழியை விட்டிருப்பது உங்களுக்கு தெரியும். 'கைதி' LCUவின் முதல் படத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் இருந்தார்.
இதில் நரேன், அர்ஜூன் தாஸ், ஹரீஷ் உத்தமன், ஜார்ஜ் மரைன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் கதை, முன்னாள் குற்றவாளியான டில்லி, 10 வருட சிறைவாசத்திற்குப் பிறகு தனது மகளை முதன்முதலில் சந்திக்க முயற்சிக்கும்போது இன்ஸ்பெக்டர் பிஜோய் (நரைன்) நடத்திய போதைப்பொருள் சோதனையால் டில்லி ஒரு பிரச்சினையில் சிக்கி கொள்வார். அந்தக் காட்சி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைக்கப்பட்டிருக்கும். 'கைதி' படத்தின் ஓபன் அண்ட் எண்ட் கதையை 'விக்ரம்' கதையுடன் இணைத்திருந்தார்.
கைதியில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்த ஒரு போலீஸ்காரர் பிஜோய் (நரேன்), விக்ரம் படத்தில் விக்ரம் (கமல்ஹாசன்) தலைமையிலான போதை ஒழிப்பு குழுவில் ஒரு பகுதியாக மிரட்டினார். நடிகர் ஜார்ஜ் மேரியன் கான்ஸ்டபிள் நெப்போலியனாக ’கைதி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். டில்லி (கார்த்தி) போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபடும்போது அவருக்கு உதவியாக இருந்தவர் கான்ஸ்டபிள் நெப்போலியன். டில்லியின் முக்கிய எதிரியான அடைக்கலம் (ஹரிஷ் உத்தமன்) டில்லி யார் என்று எனக்கு நன்றாக தெரியும்..! என்று கூறுவதுடன் கைதி திரைப்படம் முடியும். அதனைத் தொடர்ந்து, அடைக்கலம் மற்றும் அன்பு (அர்ஜூன் தாஸ்) ஆகியோர் ’விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் (சூர்யா) உடன் உரையாடுவது போல் இருக்கும். அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை முழுமையாக முடிக்காமல் அடுத்த படத்திற்கு லீடாக கொடுத்திருப்பார்.
விக்ரம் வெளியாவதற்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ரசிகர்களை தியேட்டர்களுக்கு செல்வதற்கு முன்பு கைதியைப் பார்க்கும்படி கேட்டு கொண்டார். அதற்காக, விடையையும் விக்ரம் படத்தில் கொடுத்திருந்தார் லோகேஷ்!
கைதி வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள்:
இந்நிலையில், கைதி திரைப்படம் வெளியாகி இன்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலமே லோகேஷ் கனகராஜ் என்ற பெயரை சினிமா ரசிகர்களின் இதயங்களில் நிலைநிறுத்தினார். கைதி திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் கைதியை உருவாக்கியபோது, அது ஒரு சினிவா யுனிபர்ஸை உருவாக்கும் முனைப்பில் தொடங்கவில்லை. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தது கைதி படம்தான் என்பது யாராலும் மறக்கமுடியாது. லோகேஷ் கனகராஜின் வரவிருக்கும் திரைப்படங்களான கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் ஆகியவை சினிமா யூனிவர்ஸில் ஒரு பகுதியாக இருக்கும். இந்த யுனிவர்ஸ், கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் 2 உடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.