மேலும் அறிய

விஜய்க்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.. எல்லாம் எஸ்.ஏ.சி பண்ண வேலை.. ஷோபா ஓபன் டாக்!

விஜய் அரசியலுக்கு வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் சிறுவயதில் இருந்து ரொம்ப  அமைதியானவராக வளர்ந்தார்.  முதலமைச்சராக பொறுப்பேற்றதை கூட நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை என ஷோபா கூறியுள்ளார்.

விஜய் முதலமைச்சராக வருவார் என்பதை என் கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தான் முதலில் கணித்தவர் என ஷோபா பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய் 2024ம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில் பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.  

அதில், “விஜய் முதலமைச்சரானதில் மிகப்பெரிய அளவில் ஒரு தாயாக பெருமையாக இருந்தது. முதல்வராக முதல் பிறந்தநாளை கொண்டாடுவதில் இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் பிறந்தநாள் தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அவர் பிறந்தபோது எனக்கு 17 வயது தான் ஆகியிருந்தது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார். எனக்கும் விஜய்க்கும் ஜோதிடத்தில் ஒரே லக்னம். அதனால் பிணைப்பு ரொம்ப சிறப்பாக இருக்கிறது. 

மேலும் விஜய் அரசியலுக்கு வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் சிறுவயதில் இருந்து ரொம்ப  அமைதியானவராக வளர்ந்தார்.  முதலமைச்சராக பொறுப்பேற்றதை கூட நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை.  அந்ந தருணத்தில் மகிழ்ச்சி பொங்க நானும் என் கணவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். விஜயை விட அவர் முதல்வராக வேண்டும் என்பது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் கனவாக இருந்தது. 2009ல் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பல்வேறு வகையில் உதவி செய்தார்கள். 

அப்பாவும், மகனும் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு விதைப்போட்டு வளர்த்து வந்தார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர் மனதில் அந்த எண்ணம் இருந்ததால் தான் விஜய் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். மகனுக்கு வந்த மாஸை பார்த்து தான் அப்போதே எஸ்.ஏ.சந்திரசேகர்  விஜய் கண்டிப்பாக முதலமைச்சராக வருவார் என நினைத்திருந்தார். தேர்தலில் வென்றவுடன் அப்பாவிடம் வந்து உங்க கனவை நிறைவேற்றி விட்டேன் என மகிழ்ச்சியுடன் சொன்னார்” என ஷோபா கூறினார். 

Also Read: திமுகவுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சல்.. என்னை ஒன்னுமே செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் சவால்!

அதேசமயம் விஜய்க்கு அட்வைஸ் சொல்வதே பிடிக்காது.  அதனால் தான் முதலமைச்சரானதும் நான் எதுவும் சொல்லவில்லை. 2023ம் ஆண்டு தான் விஜய் அரசியலுக்கு வரப்போகிறேன் எங்கள் இருவரையும் அழைத்து சொன்னார். நானும், என் கணவரும் எங்கள் தரப்பு கருத்தை சொன்னோம். ஆனால் நான் முடிவு பண்ணிட்டேன் என திட்டவட்டமாக கூறினார். சினிமாவில் விஜய்க்கு தொடக்கத்தில் பல விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு ஜெயித்து காட்டினார்.  அதேசமயம் விஜய் அரசியலுக்கு வந்தது பயமாகத்தான் இருந்தது. யாரும் சப்போர்ட்டுக்கு வரவில்லை. சில எதிர்பாராத விஷயங்கள் நடந்தபோது மகன் அரசியலுக்கு வராமல் இருந்திருக்கலாம் என தோன்றியது. 

பொதுவாகவே விஜய் அதிகமாக பேச மாட்டார். தன் ஆற்றலை செயலில் காட்ட வேண்டும் என நினைப்பார். அதனை வார்த்தைகள் மூலம் வீணாக்க விரும்ப மாட்டார். அதேபோல் வாக்குவாதம் செய்வதும் எப்போதும் பிடிக்காது” என ஷோபா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget