மேலும் அறிய

திமுகவுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சல்.. என்னை ஒன்னுமே செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் சவால்!

திமுகவினர் பரப்பும் தகவலால் எனக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இதனால் என் அமைச்சர் பதவியை பறிக்கவோ, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கவோ முடியாது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சியின் பொறுப்பு அமைச்சரான தன்னை காணவில்லை என திமுகவினர் பரப்பும் வதந்திகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். 

செய்தியார்கள் சந்திப்பில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது, “கடந்த சில தினங்களால் திருச்சியில் என் மீது ஒரு தனிப்பட்ட திட்டமிட்டப்பட்ட தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. தவெக வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், திருச்சியை தங்கள் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்று அது தளபதி கோட்டையாக மாறிவிட்டது என ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.வான என்னை காணவில்லை என    பொதுமக்கள் சொல்வது போல தகவல் பரப்புகிறார்கள். அது முற்றிலும் பொய் என மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஒரு மாதமாக என்னுடைய தொகுதியின் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மக்களால் அளிக்கப்பட்ட குறைகள் அடிப்படையில் எல்லாம் செய்யப்பட்டுள்ளதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது. 

நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறேன். திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளேன். தமிழ்நாடு முழுவதுமான கோயில்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். நான் இல்லாவிட்டாலும் தொகுதியில் மக்கள் பணியில் குறை ஏற்பட்டு விடக்கூடாது என தவெகவினரை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறேன். 

அமைச்சர் போன் அடித்தால் எடுப்பது கிடையாது என கூறுகிறார்கள். ஒவ்வொரு நாளும் வரக்கூடிய போன் கால்கள் அனைத்து நோட்டில் தேதி வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த புகார்கள் சரி செய்யப்பட்டதோ, அதற்கெல்லாம் நன்றி தெரிவித்தும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால் திமுக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

வெற்றியை தாங்க முடியாமல் இருக்கும் திமுகவினர் ஜெலுசில் வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கலாம். திமுகவினர் பரப்பும் தகவலால் எனக்கு எந்தவகையிலும் பாதிப்பில்லை. இதனால் என் அமைச்சர் பதவியை பறிக்கவோ, எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கவோ முடியாது. 2 நாட்கள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறோம். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. உங்கள் எனர்ஜியை வீணாக்க வேண்டாம் என திமுகவுக்கு கேட்டுக்கொள்கிறேன். 

Also Read: HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!

மேலும் மாற்றம் வேண்டும் என்று மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டார்கள். தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் செய்யப்பட்ட நிர்வாக, பொருளாதார சீர்கேடுகளை சரிசெய்யவே பல மாதங்களாகும். அதற்கான கால அவகாசத்தில் தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  எல்லா துறைகளிலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் சட்டமன்றத்தில் பேச வேண்டும் என நினைத்தவர் இன்று வீட்டில் டிவியில் அமர்ந்து சட்டமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறார். அதனை மு.க.ஸ்டாலினால் ஏற்க முடியவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Embed widget