![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Pathaan Besharam Rang: ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் ’பதான்’ பட பாடல்... அசத்தல் லுக்கில் கிறங்கடிக்கும் தீபிகா!
ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், நாளை மறுநாள் இந்தப் படத்தின் முதல் பாடலான ’பேஷரம் ரங்’ வெளியாகி உள்ளது.
![Pathaan Besharam Rang: ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் ’பதான்’ பட பாடல்... அசத்தல் லுக்கில் கிறங்கடிக்கும் தீபிகா! Shah Rukh Khan Deepika Padukone Picture From Pathaan Movie Song Besharam Rang Pathaan Besharam Rang: ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் ’பதான்’ பட பாடல்... அசத்தல் லுக்கில் கிறங்கடிக்கும் தீபிகா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/078e0c4b4a0b6bd6a78987e718d1119d1670660215413574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஷாருக்கானின் 'பதான்' படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் (டிச.12) வெளியாகும் நிலையில், இப்பாடலில் இடம்பெறும் தீபிகாவின் அசத்தலான லுக் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாலிவுட்டில் ஷாருக்கானின் ’ஓம் சாந்தி ஓம்’ படத்தில் அறிமுகமான தீபிகா, அதன் பிறகு நிகழ்த்தியதெல்லாம் வரலாறு!
தன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன் சிரிப்பால் கட்டிப்போட்ட டஸ்கி அழகி தீபிகா, தொடர்ந்து ’சென்னை எக்ஸ்பிரஸ்’, ’ஹேப்பி நியூ இயர்’ என தன் கரியரின் வெவ்வேறு கட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திய ஷாருக்கானுடன் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.
ரசிகர்களின் ஆதர்ச ஜோடியாக மாறிப்போன ஷாருக் - தீபிகா, தற்போது மீண்டும் ’பதான்’ படத்தில் இணைந்துள்ளனர்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு ’பதான்’ ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், நாளை மறுநாள் (டிச.12) இந்தப் படத்தின் முதல் பாடலான ’பேஷரம் ரங்’ வெளியாக உள்ளது.
ஏற்கெனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில், தற்போது இப்பாடலில் இடம்பெறும் தீபிகாவின் அசத்தலான லுக் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
நீச்சல் உடையில் தீபிகா இந்த போஸ்டரில் கிறங்கடிக்கும் நிலையில், தீபிகா அனைவரையும் விட கவர்ச்சியானவர் எனப் புகழ்ந்து ஷாருக் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் ஷாருக் - தீபிகா இணைந்து கலக்கிய ’தலைவா’ பாடல் பெரும் ஹிட் ஆக அமைந்தது. இந்நிலையில் சுவாரஸ்யமான விஷயமாக, ரஜினி பிறந்தநாளான டிச.12 பதான் பட பாடல் வெளியாக உள்ளது.
’பதான்’ தவிர தன் கணவர் ரன்வீர் சிங் உடன் தீபிகா நடித்துள்ள ’சர்க்கஸ்’ படமும் விரைவில் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தில் தீபிகா - ரன்வீர் இணைந்து கலக்கிய ’கரண்ட் லகாரே’ என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)