மேலும் அறிய

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

சின்னத்திரை நடிகை திவ்யா தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக போஸ்ட் செய்துள்ளார். கமெண்ட் மூலம் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து லைக்ஸ்களை கொடுத்து வருகிறார்கள்.

சமீபகாலமாக இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதரின் விவகாரம்! பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த அர்னவ் மற்றும் திவ்யா திடீரென திருமணம் செய்துகொண்டதாக சோசியல் மீடியா மூலம் தெரிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டனர். 

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை பல நாட்கள் நீடிக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன், புகார், வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகள், பஞ்சாயத்து என மாறி மாறி பூதாகாரம் எடுத்தது.  இந்நிலையில், அர்னவ் முன்னதாக செல்லம்மா தொடரில் தன்னுடன் நடித்து வரும் அன்ஷிதா உடன் நெருக்கமாக பழகி வருவதால் கர்ப்பமாக இருக்கும் தன்னுடன் சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திவ்யா. அதனால் போலீசார் அர்னவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமீனில் வெளியில் வந்த அர்னவ் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

Sevvanthi Divya: ஒரு தாய் இப்படிதான் இருப்பார்...முதன்முறையாக குழந்தை ஃபோட்டோ வெளியிட்ட செவ்வந்தி திவ்யா!

திவ்யாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மீண்டும் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்ட திவ்யா வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது குழந்தையையும் அழைத்து வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் அர்னவ் மீது அடுக்கடுக்காக குற்றங்களை சுமத்தி வந்தார். அர்னவ்விற்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர்களை திருமணம் செய்து கொண்டு பணத்தைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் விட்டு விட்டார் என பல குற்றங்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், திவ்யா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டேன் எனக் கூறி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், உண்மையில் அவர் கணவரை விவாகரத்து செய்யாமல் ஒரே நேரத்தில் கணவர் மற்றும் தன்னுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் அர்னவ் தகவல் பகிர்ந்தார். மேலும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வருடன் சேர்ந்து தனது கரியரை கெடுப்பதற்காக இப்படி பிளான் செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் அவர் தரப்பு குற்றங்களையும் தெரிவித்து வந்தார்.

இப்படி பிரச்சனை ஓடி கொண்டு இருக்கும் சமயத்தில் நடிகை திவ்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் போஸ்ட் செய்த்துள்ளார்.

“ஒரு தாய்க்கு என்ன பிரச்சனை இருந்தாலும் தனது குழந்தைக்கு என்றும் துணையாகவே இருப்பார்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். திவ்யாவின் இந்த போஸ்டுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன. மேலும் அவரின் ரசிகர்கள் பலரும் குழந்தையின் அழகான சிரிப்பை பார்த்து ,அர்னவ் மீண்டும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவார் என்றும் குழந்தை அழகாக இருக்கிறது என்றும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget