மேலும் அறிய

"வடிவேலு போன்ற சீனியர் நடிகர்கள் யாரையும் வளர விட மாட்டார்கள்" : லொள்ளு சபா சுவாமிநாதன் பேட்டி!

"ஏதாவது இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்ன்னா சொல்லுங்க மாத்திக்கலாம், அதுக்காக சும்மா சரியா வரல சரியா வரலன்னு சொல்லிகிட்டே இருக்காதீங்க." என்று வடிவேலுவை பார்த்து சொன்னேன்.

பலவருடங்களாக சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் செய்து வந்த நடிகர் சுவாமிநாதன். லொள்ளுசபாவில் வெளிச்சம் பட்டு காமெடி உலகிற்குள் வந்தார். அதன் பிறகு அவரும் சந்தானமும் இணைந்து செய்த காமெடிகள் நாம் வயிறு குலுங்க குலுங்க ரசித்தவைகள் ஆகும். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆரியர் எக்ஸாம் எழுத வருவது, அரண்மனை திரைப்படத்தில் சமயக்காரராக குதித்து குதித்து வருவது, என கிட்டத்தட்ட எல்லா சந்தானம் திரைப்படத்திலும் இடம்பெற்றுவிடுவார்.

எல்லோருக்கும் லொள்ளுசபா சுவாமிநாதன் என்று அறியப்பட்ட இவர் வடிவேலுவுக்கு முன்னாலேயே நடிக்க வந்துள்ளார் என்பது இங்கு பலருக்கும் தெரியாத விஷயம். சமீபத்தில் வைரலாகியுள்ள ஒரு பேட்டியில் அவர் வடிவேலு குறித்து பேசியுள்ளார். "ராஜ்கிரண் சார் ஆபீஸ்ல ஆபீஸ் பாயா இருப்பாரு வடிவேலு. அப்போ 'தலைவா ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்க தலைவா'ன்னு சொல்லுவார். அப்புறம் அவர் சிங்காரவேலன் படத்துல நடிச்சாரு, நான் அதுல ஒரு போலீஸ் கேரக்டர் பண்ணிருப்பேன். அப்போலாம் கார்ல போகும்போது, நீ பின்னாடி ஜம்முன்னு உக்காரு தலைவா, நான் ட்ரைவரோட ஒண்டி உக்காந்துக்குறேன்னு சொல்லுவாரு. அப்படி இருந்தவர நான் அடுத்தது ஆறு படத்துலதான் பாக்குறேன். அதுல எனக்கு ஒரு சின்ன ரோல்தான். நடிக்கும்போது நிறுத்தி நிறுத்தி 'சரியா வர்லயே, திரும்ப பண்றீங்களா… ' அப்டின்னு திரும்ப திரும்ப நிறுத்தி நிறுத்தி கேட்டுகிட்டே இருந்தார். நான் சொன்னேன், 'சார் உங்களோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நான் ரொம்ப மதிக்குறேன். ஏதாவது இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம்ன்னா சொல்லுங்க மாத்திக்கலாம். அதுக்காக சும்மா சரியா வரல சரியா வரலன்னு சொல்லிகிட்டே இருக்காதீங்க.' ன்னு சொன்னதும். 'அப்படிலாம் அவர்கிட்ட பேச கூடாது' ன்னு எல்லாரும் மெதுவா சொல்றாங்க. டைரக்டர் அங்கிருந்து கண்ண காமிச்சார், 'அவர் சொல்றத கேட்டுக்க, நான் சொன்னத பண்ணிடு'ன்னார். நானும் பண்ணேன் ஷாட் ஓகே ஆயிடுச்சு. வடிவேலு வந்து 'என்ன ஓகே, சரியா வர்லயே'ன்னார். டைரக்டர் சார் 'இல்ல சார் உங்களுக்குதான் க்ளோஸ், அவருக்கு சின்ன ஷாட்தான் ஓகே தான் வாங்க'ன்னு சொன்னதும் 'அப்படியா சரி சரி'ன்னு வந்துட்டார்." என்று கூறினார்.

மேலும் அவர் எல்லா சீனியர் நடிகர்களுமே யாரையும் வளர விட மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார். கவுண்டமணி இருக்கும்போது நிறைய பேர் கஷ்டப்பட்டுள்ளனர் என்று கூறினார். அவர் பேசுகையில், "நாகேஷ் சார், கவுண்டமணின்னு அவங்க அவங்க காலத்துல சீனியரா இருக்கும்போது ஜுனியர்கள வளரவிட மாட்டாங்க. ஆனால் செந்தில் சார் அப்படியல்ல, விவேக் சார் அப்படி அல்ல, சூரி சார் அந்த மாதிரி பண்ணமாட்டார். சிவகுமார் சார் நடிக்கும்போது சொல்லிக்கொடுத்துகிட்டே இருப்பாருன்னு சொல்லுவாங்க, ஆனா அவங்க ஷாட் நல்லா வரணும்ன்றதுக்காக அவ்வளவு மெனக்கெட்டு சொல்றாங்க, நமக்கு பார்க்க வேணும்னே பணரங்களோன்னு தோணும்." என்றார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget