”டி-ஷெர்ட் ரெடி! பட்டாசு ரெடி!..டிக்கெட் ரெடி! தலைவா...னு கத்தனும் “ - தீபாவளிக்கு ரெடியான ரஜினி மகள்!
தீபாவளி பண்டிகை அன்று வெளியானால் நிச்சயம் அவரது ரசிகர்கள் சரவெடியாக கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! படம் நாளைக்கு வருது ! மறக்காதீங்க ! ஹாப்பி அண்ணாத்த தீபாவளி!
ரஜினி காந்த் நடிப்பில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியாகவுள்ளது. சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருப்பதும் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருப்பதும் நாம் அறிந்ததே!. படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்..ஹூட் பக்கத்தில் வாய்ஸ் நோட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “எல்லோருக்கும் வணக்கம் , அண்ணாத்த தீபாவளிக்கு நான் தயாராயிட்டேன்!.. டி-ஷெர்ட் ரெடி! பட்டாசு ரெடி!..டிக்கெட் ரெடி! தியேட்டர்ல படம் பார்க்க காத்திருக்கேன்..சூப்பர் ஸ்டார் ரஜினி அப்படினு அந்த டைட்டில் கார்ட் வற்றதுக்காக காத்திருக்கேன்..தலைவாவாவா...னு கத்தனும் எல்லோருக்கும் படம் பிடிக்கும்னும் நான் நம்புறேன்..படம் பயங்கரமா வேற லெவல்ல வந்திருக்கு..நிச்சயமா ஒருவாட்டி மட்டும் யாரும் பாக்க மாட்டீங்க அப்படினு எனக்கு தெரியும்.. குறைந்தது 5 முறையாவது எல்லோரும் பார்ப்பீங்க..எல்லோருக்கு தீபாவளி வாழ்த்துக்கள்! அண்ணாத்த தீபாவளி வாழ்த்துக்கள்! நாளைக்கு தியேட்டர்ல இருந்து ஹூட் பண்ணுறேன்! குடும்பத்தோட பாதுகாப்பா தீபாவளி கொண்டாடுங்க “ என குறிப்பிட்டுள்ளார்.
To the most adorable and amazing person, @directorsiva sir 💙💙💙 welcome to hoote sir !! https://t.co/nU4MPqYC4X
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 30, 2021
அண்ணாத்த படம் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. படையப்பா , முத்து போன்ற திரைப்படங்களுக்கு பிறகு அண்ணாத்த திரைப்படம்தான் அதிக நட்சத்திர பட்டாளங்களுடன் உருவான ரஜினி திரைப்படம் . இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியா நயன்தாரவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். இது தவிர ரஜினியுடன் 80 -90 களில் ஜோடியாக நடித்த குஷ்பு மற்றும் மீனா அத்தை மகள் , மாமன் மகள்களாக நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லை .படத்தை சமீபத்தில் படத்தை தனது மகள் மற்றும் இரண்டாவது மருமகன் , சம்பந்தி, பேரன்களுடன் பார்த்த ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக ஹூட் செய்திருந்தார். அதில் தனது கடைசி பேரனுக்கு படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், முதல் முறையாக எனது பக்கத்தில் அமர்ந்து அவன் படம் பார்த்து மகிழ்சியில் திளைத்து தன்னை ஆரத்தழுவி கட்டிக்கொண்டு “தாத்து ..தாத்து” என பாராட்டியதாகவும் பெருமிதம் தெரிவித்தார் ரஜினி.
பேரனோடு அண்ணாத்த திரைப்படத்தை நேற்று பார்த்தேன். Part-2 https://t.co/4LO8F8uUCQ
— Rajinikanth (@rajinikanth) October 28, 2021
அதே போல படத்தை பார்த்த சௌந்தர்யாவும் படம் குறித்த தனது கருத்தை பகிர்ந்திருந்தார். கண்ணில் ஆனந்த கண்ணீருடன் , இயக்குநர் சிவாவின் கையை பிடித்துக்கொண்டு பாராட்டியதோடு..தனது தந்தையை நன்றாக பார்த்துக்கொண்டதற்கு நன்றி சிவா சார்..நீங்க இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்ய வேண்டும் என அன்பு கோரிக்கையும் விடுத்திருந்தார். ரஜினி படம் வெளியாகிறது என்றாலே கொண்டாட்டம் களைக்கட்டும் அதுவும் தீபாவளி பண்டிகை அன்று வெளியானால் நிச்சயம் அவரது ரசிகர்கள் சரவெடியாக கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! படம் நாளைக்கு வருது ! மறக்காதீங்க ! ஹாப்பி அண்ணாத்த தீபாவளி!