Sathyaraj: சத்யராஜ் நடிக்கும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.. கார்த்தி சிதம்பரத்தின் நக்கல் பதிவு!
Sathyaraj - Modi Biopic: நடிகர் சத்யராஜ் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து கேலியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
![Sathyaraj: சத்யராஜ் நடிக்கும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.. கார்த்தி சிதம்பரத்தின் நக்கல் பதிவு! sathyaraj to act in modi biopic sources Karti Chidambaram satirical tweet goes viral Sathyaraj: சத்யராஜ் நடிக்கும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.. கார்த்தி சிதம்பரத்தின் நக்கல் பதிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/4341b67571ba23f359d2b9ec6fd904a01716050241949574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சத்யராஜ் (Sathyaraj) பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது தான் கோலிவுட்டின் இன்றைய ஹாட் டாப்பிக்.
ரசிகர்கள் அப்செட்!
சினிமா தாண்டி திராவிட அரசியல் கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டவரும், தொடர்ந்து அதனை பொதுவெளியில், மேடைகளில் பேசி வருபவருமான நடிகர் சத்யாஜூக்கு அதற்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக தந்தை பெரியார் மீது தான் கொண்ட ஈர்ப்பை ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தி வரும் நடிகர் சத்யராஜ், முன்னதாக பெரியார் பயோபிக்கிலும் நடித்துள்ளார். இந்நிலையில், திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான இந்துத்துவா கொள்கைகளைக் கொண்ட பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சத்யராஜ் விலை போய் விட்டாரா, அவரது பகுத்தறிவுக் கொள்கை என்ன ஆனது என இணையவாசிகள் கேள்வி எழுப்பியும், கேலி கமெண்டுகள் பகிர்ந்தும் வருகின்றனர்.
திவ்யா சத்யராஜ் விளக்கம்..
இதுகுறித்து நடிகர் சத்யராஜ், தனக்கே இது புதிய தகவல் என்றும், “நாத்திகம் பேசிய எம்.ஆர்.ராதா ஆன்மிகவாதியாகவும் நடித்துள்ளார், வாய்ப்பு வந்தால் பார்க்கலாம்” என்றும் விளக்கமளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இது ஒருபுறமிருக்க சத்யராஜின் மகள் திவ்யா இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும், “சினிமாவில் வில்லன் வேடத்தில் நடித்தால் நிஜத்தில் வில்லனாக தான் இருக்க வேண்டுமா, இதனை கதாபாத்திரமாகப் பாருங்கள்” என்றும் நமது ஏபிபி நாடு தளத்திடம் பேசியிருந்தார்.
கார்த்தி சிதம்பரம் பதிவு
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இதுகுறித்து கேலியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடித்த அரசியல் நையாண்டி படமான அமைதிப்படை படத்தின் அமாவாசை கதாபாத்திரத்தை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு, “அமாவாசை பாத்திரத்தில் நடிக்க சரியான ஆள்” என நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.
The perfect person to play “Ammavasai” https://t.co/dl2YERgSKF
— Karti P Chidambaram (@KartiPC) May 18, 2024
சத்யராஜ் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான அமைதிப்படை படத்தின் ஆல்டைம் பென்ச்மார்க் கதாபாத்திரங்களில் ஒன்றான அமாவாசை, சமகால அரசியல் தலைவர்களையும் பகடி செய்யும் வகையில் இன்றும் ஜொலித்து ரசிகர்களை ஈர்க்கும் கதாபாத்திரமாகும். இந்நிலையில், தன் எக்ஸ் தளத்தில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)