மேலும் அறிய

”நான் என்ன பேசினாலும் அதில் கமல்ஹாசன் இருப்பாரு “ - மனம் திறந்த சத்தியராஜ்

அந்த கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அன்றே கணித்தவர் கமல்ஹாசன்தான்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜ், தற்போது பல படங்களிலும் குணச்சித்திர, காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வீட்ல விசேஷம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். 


அவர் எப்போதுமே மேடைகளில் கமல்ஹாசனை புகழ்ந்து பேசுவது வழக்கம் .சினிமா நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய சத்தியராஜ் தன்னை கதாநாயகனாக மாற்றியவர் நடிகர் கமல்ஹாசன் என்றார். “ நான் எப்போதுமே வில்லனாகவே நடித்து வந்தேன்.ஒரு 75 படங்கள் வில்லனாக நடித்து , ஹீரோவாக நடித்த சமயம் . அப்போ என்னை வைத்து மிகப்பெரிய  வெற்றிப்படத்தை தயாரித்தவர் கமல்ஹாசன் . அதுதான் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு. எனக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுத்திருந்தார். மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பிறகு பெரும்பாலான படங்களில் நான் காவல்துறை அதிகாரியாகத்தான் நடித்தான். 


”நான் என்ன பேசினாலும் அதில் கமல்ஹாசன் இருப்பாரு “ - மனம் திறந்த சத்தியராஜ்

அந்த கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை அன்றே கணித்தவர் கமல்ஹாசன்தான். அந்த படத்திற்கு முன்னதாக மோகன்லால் நடித்த போயிங் போயிங் திரைப்படத்தில் நடிக்க நான் அவரிடம் கேட்ட பொழுது , ஏன் படத்தில் மூன்று கதாநாயகி என்பதாலா ? என என்னை கலாய்த்தார் . நான் இல்லை சார் கதை நல்ல தமாசா இருக்கிறது என்றேன். உடனே கமல்ஹாசன் இல்லை வேண்டாம்...நான் வேற கதை தருகிறேன் என்றார். நான் நாத்திகவாதி , அவரும் நானும் மேடைக்கு பின்னால் நிறைய பேசுவதுண்டு. அவரை பற்றி என்னால் எந்த மேடையிலும் பேசாமல் இருக்க முடியாது “ என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sibi Sathyaraj (@sibi_sathyaraj)


இதே போல சத்தியராஜ் சமீபத்தில்  மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பான செய்திகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் என்பவருக்கு ஐன்ஸ்டீன் அளவுக்கு எல்லாம் விஷயம் தெரியும் என நினைக்கக்கூடாது. இது சமூகத்தின் மிகப்பெரிய தவறு. நீங்கள் ஏன் நடிகர், நடிகைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்?” என கேள்வியெழுப்பிய சத்யராஜ், “நாங்கள் ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் என்றால் நடிப்போம். அவ்வளவு தான். எனவே எங்களுக்கு சோறு மட்டும் போடுங்கள். தலையில் வைத்து கொண்டாடாதீர்கள். இதுதான் எனக்கு ஊடகங்கள் மேல் உள்ள வருத்தம். நடிகர்கள் யாரும் காரல் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்லது ஏதோ அறிஞர்களோ இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்” என கூறியிருந்தது வைரலானது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget