Tourist Family OTT: வெளியான ஒரே மாதத்திற்குள் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'டூரிஸ்ட் பேமிலி'! எப்போது ரிலீஸ்?
சசிகுமார் மற்றும் சிம்ரன் காம்பினேஷனில் திரைக்கு வந்து, ஹிட் கொடுத்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் இந்த மாதம் இறுதியில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் சசிக்குமார், இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பு, எளிமையான கதை, எதார்த்தமான மனிதர்களை கொண்ட ஒரு கதையை மையப்படுத்திய திரைப்படம் தான் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில்... யோகி பாபு, ரமேஷ் திலக். கமலேஷ், எஸ் எஸ் பாஸ்கர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இலங்கையிலிருந்து வந்த அகதிகள் சென்னையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்திய திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி.
கடந்த மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆன இந்த படத்தை, 24 வயதே ஆகும் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். 'ரெட்ரோ' திரைப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சசிகுமாரை இந்த படத்திற்காக பாராட்டிய, தகவலை, சசி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதே போல் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை அழைத்து தன்னுடைய பாராட்டுக்களை கூறினார்.

படம் வெளியான போது வெறும்150 திரையரங்கங்களே இந்த படத்திற்கு கிடைத்த நிலையில் , பின்னர் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'டூரிஸ்ட் பேமிலி' காட்சிகள் அதிகரிக்கப்பட்டு. உலகம் முழுவதும் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' இதுவரை ரூ.70 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. இது இந்த படத்தின் பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்தப் படம் திரையரங்குகளில் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து, இப்போது ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது. பொதுவாக எந்த ஹிட் படமாக இருந்தாலும் உடனே ஓடிடிக்கு வராது. ஆனால், இப்போது சசிகுமாரின் படம் ஓடிடிக்கு ரெடியாகிவிட்டது. வரும் 30ஆம் தேதி டூரிஸ்ட் பேமிலி படம் ஓடிடிக்கு வர இருக்கிறது. அதுவும் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.





















