மேலும் அறிய
Saroja Devi : கையை பிடிச்சு கூட்டிட்டுப்போன சூர்யா.. பிரியமான விஜய்.. சரோஜா தேவி சொன்ன நெகிழ்ச்சி கதை
பாலும் பழமும்' படத்தில் சிவாஜியும் நானும் நடித்து இருந்தோம். என்னை விட நீ தான் ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கன்னு சொன்னாரு. எவ்வளவு விருதுகள் வாங்கினாலும் அதற்கு ஈடு இல்லை... என்றார்

சரோஜா தேவி, விஜய், சூர்யா
பழம் பெரும் நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய அவரின் நடிப்பு திறமையால் அபிநய சரஸ்வதி என அழைக்கப்பட்டார். ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக இருந்த வரை இன்றும் மறக்க முடியாது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சரோஜா தேவி தனது சினிமா பயணத்தில் சக நடிகர்களுடன் அவருக்கு இருந்த நட்பு குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி :
கன்னடத்தில் "மகாகவி காளிதாஸா" திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்த இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்தியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரை இன்று வரை தெய்வமாக வணங்கி வருகிறார். நடிகர் சிவாஜி கணேசன்தான் மட்டும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தன்னுடன் நடிப்பவர்களும் சிறப்பாக நடிக்க வேண்டும் என நினைப்பவர். சக நடிகர்களுக்கு எப்படி நடிக்க வேண்டும் என சொல்லி கொடுக்கும் பழக்கம் கொண்டவர். 'பாலும் பழமும்' படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்து இருந்தோம். அப்படத்தை பார்த்துவிட்டு என்னை விட நீ தான் ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்கன்னு சொன்னாரு. அவர் வாயில இருந்து வந்த அந்த வார்த்தையை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எவ்வளவு விருதுகள் வாங்கினாலும் அதற்கு ஈடு இல்லை.
ஜெமினி கணேசன் குடும்பம் :

நானும் ஜெமினி கணேசனும் பிரெண்ட்ஸ். ரொம்ப தமாஷா பழகுவார். அவரோட மொத்த குடும்பமும் எனக்கு நல்லா தெரியும். நாங்க ஒரு படத்துக்காக ஊட்டிக்கு ஷூட்டிங் போயிருந்தோம். அப்போ ஜெமினி கணேசன் அம்மா, அவங்க குடும்பம் எல்லாருமே எங்களோட வந்து இருந்தாங்க. கமலாவும் நானும் ரொம்ப க்ளோஸ்.

ஊட்டில போட்டிங் போய் இருந்தோம். அப்போ காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் சில பேர் வந்து எங்க போட்டை சுத்தி வளைச்சுட்டாங்க. நான் ரொம்ப பயந்து போயிட்டேன். ஆனா கமலா தைரியமாக அவங்களோட சண்டை போட்டாங்க. அப்புறமா போலீஸ் வந்து அவர்களை அனுப்பி வைத்துவிட்டு எங்களை பாதுகாப்பா கூட்டிட்டு வந்தாங்க.
விஜய் - சூர்யா:
இப்போ இருக்குற நடிகர்களில் விஜய் கூட 'ஒன்ஸ்மோர்' மற்றும் சூர்யாவோடு 'ஆதவன்' படத்தில் நடித்துள்ளார் சரோஜா தேவி. அவர்களை பற்றி அவர் கூறுகையில் "அனைவரையும் போலத்தான் அவர்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் நான் ஷூட்டிங் ஸ்பாட் போன உடனே சூர்யா வந்து என்னை கையை பிடிச்சு கூட்டிட்டு போவாரு. விஜய் அவ்வளவு பிரியமா இருப்பார். நானும் அவங்க கிட்ட அப்படி தான் இருப்பேன்" என்றார் சரோஜா தேவி.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement

470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
வணிகம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement