Watch Video : 22 ஆண்டுகால திருமண பந்தம்... அழகான உறவு மேலும் தொடர பிரார்த்தனை... சரத்குமார் வெளியிட்ட அழகான வீடியோ
சரத்குமார் - ராதிகா சரத்குமார் 22ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு நடிகர் சரத்குமார் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் கம்பீரமான ஒரு ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான இவர் வில்லனாக திரை பயணத்தை தொடர்ந்து பின்னர் ஹீரோ, குணச்சித்திர நடிகர் என பல பரிமாணங்களை கடந்தவர். இவர் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நட்புக்காக, நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்கள் சரத்குமாரின் ட்ரேட்மார்கை ஆழமாக பதித்த எவர்க்ரீன் கிளாசிக் திரைப்படங்களாகும்.
சமீபத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுக்கப்படும் கேரக்டரை மிக சிறப்பாக வெளிப்படுத்த கூடிய அற்புதமான கலைஞன்.
View this post on Instagram
வேறுபாடு இல்லாத அன்பு :
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் இன்றுடன் இந்த ஆதர்ச தம்பதி 22 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். இருப்பினும் சரத்குமார் தனது முதல் தாரத்து குழந்தைகளான வரலக்ஷ்மி மற்றும் பூஜா இருவரையும் ஒன்று போலவே இன்றும் சிறப்பான உறவை வெளிப்படுத்தி வருகிறார். அதற்கு உதாரணமாக ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளன.
View this post on Instagram
சரத்குமார் இன்ஸ்டா போஸ்ட் :
அந்த வகையில் 22வது திருமண நாளை கொண்டாடும் விதமாக ஒரு அழகான வீடியோ பதிவு ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் நடிகர் சரத்குமார். "எங்களின் இந்த நீண்ட கால பேரின்பம் நிறைந்த பயணத்தில் அன்பு, புரிதல், தியாகம், ஒற்றுமை என பல மகிழ்ச்சிகரமான தருணங்கள் நிறைந்துள்ளன. இதுவரையில் இந்த வாழ்க்கையில் அனைத்து விதமான உணர்ச்சிகள், புரிதல்கள், சோகங்கள் நிறைந்து இருந்தாலும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறிய வைத்ததற்கு நன்றி. நம் இருவரையும் என்றும் இதே போல ஒற்றுமையாக நீண்ட ஆண்டுகள் எதிர்காலத்தில் ஒன்றாக வலிமையாக வைத்திருக்க வேண்டும் என இந்த நன்னாளில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என அந்த பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார். ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.