Sara Ali Khan: மும்பை டிராஃபிக்கோட மல்லுகட்ட முடியல.. ஷூட்டிங் முடிந்து லோக்கல் ட்ரெயினில் வீடு திரும்பிய பிரபல நடிகை..!
Sara Ali Khan: மும்பை போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்கும் வகையில் தான் இவ்வாறு வீடு திரும்புவதாக சாரா குறிப்பிட்டுள்ளார்.
ட்ரெயினில் திரும்பிய நடிகை:
போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல இந்தி நடிகை சாரா அலி கான் (Sara Ali Khan) ஷூட்டிங் முடிந்து மும்பை லோக்கல் ரயிலில் வீடு திரும்பி, வீடியோ பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபலங்களான சைஃப் அலி கான் - அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலி கான் 2018ஆம் ஆண்டு 'கேதர்நாத்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங்குடன் சாரா அலி கான் நடித்த 'சிம்பா' படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அதனைத் தொடர்ந்து வெளிவந்த 'லவ் ஆஜ் கல்', 'கூலி நம்பர் 1' படங்கள் பெரும் தோல்வியைத் தழுவிய நிலையில், தன் நடிப்புக்காக கடும் விமர்சனங்களை சந்தித்தார்.
தனுஷூடன் நடித்த நடிகை:
தொடர்ந்து கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்த தொடங்கிய சாரா, இறுதியாக நடிகர் தனுஷூடன் இணைந்து நடித்த 'அத்ரங்கி ரே' (தமிழில் கலாட்டா கல்யாணம்) படம் மூலம் பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது கரண் ஜோஹர் தயாரிப்பில் 'ஏ வாதன் மேரே வாதன்' எனும் படத்தில் நடித்து வருகிறார் சாரா. இந்நிலையில் மும்பை போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்கும் வகையில் முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து லோக்கல் ரயிலில் சாரா வீடு திரும்பிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
படப்பிடிப்பு முடிந்து மும்பை லோக்கல் ரயில் மற்றும் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்ததை வீடியோவாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் சாரா பகிர்ந்துள்ள நிலையில், அவரது எளிமையை ரசிகர்கள் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.