Samantha | ''குழந்தை பெற்றுக்கொள்ளும் வலி....” - பெண் வலிமை குறித்து பேசிய சமந்தா!
குழந்தை பெற்றுக்கொள்ளும் வலி வேதனையானது என நடிகை சமந்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
விவாகரத்துப்பிறகு படுபிஸியாக இருக்கிறார் சமந்தா. ஓ சொல்றியா மாமா வெற்றி சமந்தாவை வேற லெவலில் ட்ரெண்டாக்கியது. அதற்குபின்னுன் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கிறார் நடிகை சமந்தா. தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் , தெலுங்கில் சகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. விவாகரத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது நாய்க்குட்டி , நண்பர்கள் , விடுமுறை கொண்டாட்டம் , உடற்பயிற்சி என தனக்கான நேரத்தை அதிகமாக செலவிட்டு வருகிறார்.
அவ்வபோது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் சமந்தா. அவர் ஒரு சுற்றுலா பிரியர் ஆவார். மேலும், அவர் சமூகவலைதளங்களில் தனது விடுமுறை நாட்களை கழிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
கடந்த அக்டோபர் மாதம் துபாய் மற்றும் ரிஷிகேஷுக்கு விடுமுறை சென்றுவிட்டு, கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடிய சமந்தா, சமீபத்தில் பனிச்சறுக்கு கற்க சுவிட்சர்லாந்து சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் குழந்தை பெற்றெடுப்பது தொடர்பான சமந்தா பேசிய ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும்வேதனையானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ''பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். ஆனாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் வலி வேதனையானது. ஆபரேஷன் இல்லாமல் மருத்துவர்கள் அறையில் குழந்தை பெற்றுக்கொள்வது மிகவும் வேதனை. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, சமந்தா, பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என படுபிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். திரையுலகில் மிகவும் அன்னியோன்யமான தம்பதி என பலராலும் பாராட்டப்பட்டனர்.
இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.