திருமண முறிவுக்குப் பின் சமந்தா போட்டோ முதல் பதிவு... திருமண நாளில் வெள்ளை உடையில் ‛பழைய காதல்’
Samantha Photo: ‛‛பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம்...’ சமந்தாவின் மவுனமான பதிவு!
பிரபலங்களின் சொந்த வாழ்க்கை எப்போதுமே கண்ணாடி போன்றது. அதில் சிறு கீறல் விழுந்தாலும், அது காட்டுத்தீயாய் பரவும், நவீன உலகில் பகிரும். பிரபலங்களின் மகிழ்வான நிகழ்வுகள் எப்படி இங்கு பரபரப்பாக பேசப்படுகிறதோ... அதே போல் தான், அவர்களின் சோகங்களும் பொதுவெளியில் உலா வரும். அப்படி தான், சில ஆண்டுகளுக்கு முன் சமந்தா-நாகசைதன்யாவின் திருமணமும் கொண்டாடப்பட்டது. தமிழ்-தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஏதோபித்த ஆதரவை பெற்ற பிரபலங்களின் திருமணம் அது. ஒரு பிரபலத்தின் திருமணமே இங்கு நான்கு நாளைக்கு பேசப்படும். அதில் இருவரும் பிரபலம் என்றால், அதுவும் முன்னணி பிரபலம் என்றால் சொல்லவா வேண்டும். காணும் இடமெல்லாம் மகிழ்ச்சி.. துள்ளல்... கொண்டாட்டம்... கோலாகலம் என சிலாகிக்கப்பட்ட சைதன்யா-சமந்தா திருமணம்... தொடங்குவதற்குள் முடிவுக்கு வந்துள்ளது.
சைதன்யா இந்து, சமந்தா கிறிஸ்தவர். ஆனால் அவர்களின் திருமணத்தை இரு மத சடங்குகளுடன் கொண்டாட இருதரப்பும் முடிவு செய்தது. 2017 அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7 ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் சைதன்யா-சமந்தா காதல் திருமணம் நடைபெற்றது. சமந்தா கிறிஸ்தவர் என்பதால், அக்டோபர் 7 ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி நடந்த அவரது திருமணத்தை அவர் என்றும் மறக்காமல் கொண்டாடுவார். இன்று அதே நாள்... ஆனால் இம்முறை திருமண நாள் கொண்டாட முடியாத சூழலில் தான் சமந்தா ஒரு பதிவை சற்று முன் செய்துள்ளார். அது நிகழ்ச்சி ஒன்றை காணச் சொல்லும் முன் அறிவிப்பு என்றாலும், அதில் இடம் பெற்றுள்ள வாசங்கள் தான் குறிப்பிடத்தக்கவை.
‛‛பழைய காதலின் பாடல்கள் - மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள்... பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி.
எனக்கு பிடித்த @ekaco நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை, நிலையான பேஷன் தினம், அக்டோபர் 8 அன்று இரவு 7 மணிக்கு FDCI x Lakmé பேஷன் வீக்கில் பாருங்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram