கழுத்துக்கு கீழே.. இடுப்புக்கு கீழே ட்ரெஸ் போட்டா... சோஷியல் மீடியா விமர்சனங்களுக்கு பளார் கொடுத்த சமந்தா..
ஒரு பெண்ணை அவள் அணிந்திருக்கும் வெளிப்புற ஆடையை வைத்து அவளை மதிப்பீடுவதை நிறுத்துங்கள் என்று சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ ஒரு பெண்ணை அவள் அணிந்திருக்கும் நெஞ்சு அளவிலான ஆடையை கொண்டோ, இடுப்பு அளவிலான ஆடை கொண்டோ வைத்து மட்டும் மதிப்பிடுவதை நிறுத்துங்கள். ஒருவரை தோற்றத்தை வைத்து கணக்கு போடுவதன் வலியை ஒரு பெண்ணாக நான் உணர்ந்திருக்கிறேன்.
ஒரு பெண்ணை அவள் அணிந்திருக்கும் ஆடை, படிப்பு, சமுதாயத்தில் அவளுக்கு இருக்கும் அந்தஸ்து, வெளிப்புறத்தோற்றம், தோலின் நிறம் உள்ளிட்டவற்றை கொண்டு மதிப்பிடுகிறோம். இந்த பட்டியல் ஒன்றன் பின் ஒன்றாக நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு நபர் அணியும் ஆடைகளை கொண்டு அவர் இப்படித்தான் என உடனடியாக மதிப்பிடுவது என்பது யாரும் செய்யக்கூடிய எளிதான காரியம்.
நாம் இருப்பது 2022. அதனால், ஒரு பெண் அணிந்திருக்கும் வெளிப்புற ஆடையை வைத்து மட்டும் அவளை மதிப்பிடுவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நம்மை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தலாமே. அந்த மதிப்பீட்டை கொஞ்சம் நமக்குள் திருப்பி சுயபரிசோதனை செய்வதுதான் பரிணாம வளர்ச்சி. நமது சிந்தனைகளை இன்னொருவர் மீது திணிப்பதால் யாருக்கும் எந்த நன்மையும் நடக்காது. ஒரு நபரை நாம் அளவிடும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மெதுவாக மீண்டும் எழுதுவோம்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நாகசைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சமந்தா என்ன செய்தாலும் பேசு பொருளாகிறது இல்லை வைரலாகிவிடுகிறது. அந்த வகையில், அண்மையில் ஃபிலிம் க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவின் உடை மற்றும் புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூகவலைதளங்களில் வைரலானது.
View this post on Instagram
எவ்வளவு அழகு இல்ல என அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் உச்சுக்கொட்டி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ட்ரோல்களும், கிண்டல்களும் பறந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த ட்ரோல்களுக்கு பதிலளிக்கும் வகையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.