மேலும் அறிய

Samantha Ruth Prabhu | பிரிவுக்குப் பின் முதல் அவுட்டிங்.. செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்த பின்னர் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்துள்ளார். சமந்தா இரண்டு நாய்க்குட்டிகளை வளர்க்கிறார்.

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்த பின்னர் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்துள்ளார். சமந்தா இரண்டு நாய்க்குட்டிகளை வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டிகளை அழைத்துக் கொண்டு சமந்தா நேற்று செப்.13 ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு குழந்தைகளுடன் அம்மா, பெட் கிளினிக் வந்தார். ஜெனரல் செக்கப் தான். அம்மாவின் கடமையல்லவா என்று பதிவிட்டுள்ளார்.

அவர் தனது நாய்க்குட்டிகளுக்கு ஹேஷ் மற்றும் சாஷா எனப் பெயர் வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து மணந்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 தொடர் முதலில் பல எதிர்ப்புகளைச் சந்தித்து, வெப்சீரிஸ் சரியான பிறகு பலத்த வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தான்யாவை பிரிவதாக அறிவித்தார். அது குறித்த அறிவிப்பை கணவன் . மனைவி இருவருமே சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். 

இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில், ”நீண்ட ஆலோசனைக்கு பிறகு,  எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம். எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள்,  ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும்”எனத் தெரிவித்திருந்தனர்.


Samantha Ruth Prabhu | பிரிவுக்குப் பின் முதல் அவுட்டிங்.. செல்ல நாய்க்குட்டிகளுடன் சமந்தா!

ஆனால், சும்மாவா விடுவார்கள் நம் சமூகத்தின் நாலு பேர். நாலு பேர் நாற்பது, நானூறு விதமாகப் பேசத் தொடங்கினர். குறிப்பாக அவர் க்ளாமர் ஃபோட்டோஷூட்டில் கலந்து கொண்டது தான் விவாகரத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர் டிசைனரை காதலித்ததாகவும். அவருடன் நெருக்கமாகப் பழகி கருக்கலைப்பு வரை சென்றதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அவற்றை மறுத்த சமந்தா வதந்தி பேசும் சமூகத்துக்காக இன்ஸ்டாகிராமில் சாட்டையடி கொடுத்தார். 

''நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று குறிப்பிட்டு ஊர் வாய்க்கு மூடி போட்டார்.

தன்னைப் பற்றி வதந்திகள் ஒருபுறம் இருக்க, ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி - தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்கிறார். விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு நடிகை சமந்தா முகம் காட்டும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget