மேலும் அறிய

Samantha | ரூ.200 கோடி ஜீவனாம்சம்... வேண்டாமென்ற சமந்தா.. விவாகரத்து பின்னணி!

தன்னை  நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் எனக் கூறி நாக சைதன்யா குடும்பம் தனக்கு கொடுக்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

நாக சைதன்யா குடும்பத்தினர் வழங்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நடிகை சமந்தா ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார்ர். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் இருவரும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். திரையுலகில் மிகவும் அன்னியோன்யமான தம்பதி என பலராலும் பாராட்டப்பட்ட இவர்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தகவல் பரவி வந்தது. ஆனால், இது குறித்து பொதுவெளியில் இருவரும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர்.

Samantha | ரூ.200 கோடி ஜீவனாம்சம்... வேண்டாமென்ற சமந்தா.. விவாகரத்து பின்னணி!

அண்மையில் நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. ஆனால், அது தொடர்பான எந்த நிகழ்விலும் சமந்தா பங்கேற்கவில்லை. அதுபோல், நாகார்ஜுனாவின் பிறந்தநாள் பார்ட்டி, பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வழங்கிய விருந்து நிகழ்ச்சிகளிலும் சமந்தா பங்கேற்கவில்லை. அது தொடர்பான புகைப்படங்களில் சமந்தா இல்லாதது ரசிகர்கள் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது

அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நாக சைதன்யா அளித்த பேட்டியில், “நானும் சமந்தாவும் விவாகரத்து செய்யப் போவதாக பலரும் பல விதமாக பேசி வருவது மிகுந்த மன வேதனையை தருகிறது.” என்று கூறினார்.

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவுடனான திருமண உறவை தான் முறித்துக் கொள்வதாக தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என தகவல் பரவின. இன்று கூட இதுகுறித்து இருவரும்  பொது விளக்கம் அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதிலும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக சமந்தா அறிவிக்க இருக்கிறார் என்ற தகவலை பரப்பினர்.

இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இருவரின் பதிவிலும் சமந்தா, சைதன்யா என்ற வார்த்தை மட்டுமே மாறி இருக்கிறது. மற்றபடி ஒரே தகவலையே அவர்கள் பதிவிட்டு உள்ளனர். குறிப்பாக தங்கள் நீண்ட நாள் நட்பு தொடரும் என்றும், இந்த கடினமான காலத்தில் தங்களின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் சுய உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ரசிகர்களிடம்  இருவரும் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதனிடையே,விவாகரத்துக்காக நாக சைதன்யா குடும்பம் சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும், அதை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தன்னை  நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் என்றும் ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் சமந்தா கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தா  - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக வெளியான தகவலை அறிந்த நாகார்ஜுனா அக்கினேனி குடும்பத்தினர் சமாதான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், அது பலனளிக்காத நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்து இருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
TNPSC Update: தூள் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 1, 1ஏ, குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இதுதான் விஷயம்!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
HPV Vaccination: ஆண்களே, உங்க வீட்டு பெண்களுக்காக இத செய்யுங்க - புற்றுநோயை தடுக்கும் எச்பிவி தடுப்பூசி முழு விவரம் இதோ..!
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
TN UYEGP Scheme: இளைஞர்களுக்கான ஜாக்பாட்..! ரூ.15 லட்சம் வரை கடன், ரூ.3.75 லட்சம் மானியம் - வாரிக் கொடுக்கும் தமிழக அரசு
Kanguva:
Kanguva: "கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் சுமார்தான்.. ஆனால்" சூர்யா மனைவி ஜோதிகா ஆதங்கம்
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
மாமியார் வீட்டுக்கே சென்று தலையை உடைத்த மருமகன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் ! என்ன நடந்தது?
Embed widget