மேலும் அறிய

Samantha & Naga Chaitanya| பேச்சுவார்த்தையில் தோல்வி - 50 கோடி ஜீவனாம்சம் கோரும் சமந்தா? விரைவில் அறிவிப்பு !

இருவரும் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதியன்று தங்கள் விவாகரத்து குறித்த நிலைப்பாட்டை ஊடகங்கள் முன்னிலையிலோ அல்லது அறிக்கையாகவோ வெளியிடுவார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களை திறந்தாலே சமந்தா,  நாக சைத்தன்யாவின் பிரிவு செய்தியாகவே உள்ளது. டோலிவுட்டின் Most Romantic Couples ஆக இருந்தவங்களுக்கு என்னதான் ஆச்சு ? ஏன் திடீரென இப்படி முடிவெடுத்துட்டாங்க என இருவரின் ரசிகர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகர்ஜூனாதான் என கூறப்படுகிறது. முன்னதாக சமந்தா கிளாமராக நிறைய  ஃபோட்டோஷூட் செய்வது நாக சைத்தன்யாவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். அப்போதே சமந்தாவிற்கும் குடும்பத்தினருக்குமிடையில் மனவருத்தமிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெளியான ஃபேமிலி மேன் தொடரில் , போல்டாக சில காட்சிகளில் நடித்திருந்தார் சமந்தா. அதனை பலர் பாராட்டினாலும் நாகர்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விருப்பமில்லையாம். இந்நிலையில் முன்னதாக இருந்த பிரச்சனை கூடுதலாக புகைய தொடங்கவே, இது சமந்தாவிற்கும் நாக சைத்தன்யாவிற்குமிடையில் கூடுதல் விரிசலை ஏற்படுத்தி விவாகரத்துவரை சென்று விட்டது என சில டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samantha & Naga Chaitanya| பேச்சுவார்த்தையில்  தோல்வி - 50 கோடி ஜீவனாம்சம் கோரும் சமந்தா? விரைவில் அறிவிப்பு !
இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட 4 ,5 முறை பேச்சு வார்த்தை நடத்தியதாம் குடும்ப நல நீதிமன்றம். ஆனால் இருவரும் தங்கள் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பதாகவும் , பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றும்  தெலுங்கு மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் சமந்தா நாக சைத்தன்யாவிடம் 50 கோடி ஜீவனாம்சம் கேட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இருவரும் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதியன்று தங்கள் விவாகரத்து குறித்த நிலைப்பாட்டை ஊடகங்கள் முன்னிலையிலோ அல்லது அறிக்கையாகவோ வெளியிடுவார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா நாகசைத்தன்யா இருவரும் சமூக ஊடகங்களில் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும் சில செயல்பாடுகள் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. முதலில் சமந்தா சமூக வலைத்தளங்களில் அக்கினேனி என்னும் நாகர்ஜூனாவின் குடும்ப பெயரை மாற்றினார். ஃப்ரீ டைமில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சமந்தா , சமீப காலமாக அதனை தவிர்த்துவிட்டார். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற அவரிடன் இந்த செய்திகள் குறித்த உண்மைத்தன்மையை செய்தியாளர் கேட்டதற்கு ‘ அறிவு இருக்கா’ என அவரிடம் சீரினார். அதேபோல நாக சைத்தன்யாவும் ‘லவ் ஸ்டோரி’ தெலுங்கு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது சமந்தா குறித்து கேட்ட கேள்விக்கு ’நான் இங்கு படத்தின் புரமோஷனுக்காக வந்துள்ளேன் ! படம் குறித்த கேள்வியை மட்டுமே கேளுங்கள் ‘ என காட்டமாக தெரிவித்தாராம்.

Samantha & Naga Chaitanya| பேச்சுவார்த்தையில்  தோல்வி - 50 கோடி ஜீவனாம்சம் கோரும் சமந்தா? விரைவில் அறிவிப்பு !
இந்நிலையில் தான் இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக  அமைந்துள்ளது மற்றொரு சம்பவம். லால் சிங் சத்தா படத்தின் புரமோஷனில் கலந்துக்கொள்வதற்காக மும்பை சென்ற நாக சைத்தன்யாவிற்கு, அமீர்கான் குடும்பத்துடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்து கொடுத்துள்ளார். அப்போது படக்குழுவுடன் இணைந்து நாகசைத்தன்யா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதில் நாகர்ஜூனா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இடம்பெற்ற நிலையில் சமந்தா பங்கேற்கவில்லை. இது ரசிகர்களிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் விரைவில் இது குறித்து மௌனம் கலைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget