Watch video | ‛அந்த பாடலை முதலில் நான் நிராகரித்தேன்’ - ஓ... சொல்றீயா பாடல் குறித்து மனம் திறந்த சமந்தா!
”விவாகரத்திற்கு பிறகு நான் உடைந்துவிடுவேன் என நினைத்தேன்; ஆனால் நான் உண்மையாகவே துணிச்சலானவளாக இருக்கிறேன்“
![Watch video | ‛அந்த பாடலை முதலில் நான் நிராகரித்தேன்’ - ஓ... சொல்றீயா பாடல் குறித்து மனம் திறந்த சமந்தா! Samantha finally opens up on Oo Antava from Allu Arjun's Pushpa; Sukumar REVEALS she rejected song initially Watch video | ‛அந்த பாடலை முதலில் நான் நிராகரித்தேன்’ - ஓ... சொல்றீயா பாடல் குறித்து மனம் திறந்த சமந்தா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/c9f0208df4a3701f87c11330d221255d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவை அவரை சுற்றி வரும் சர்ச்சைகளும் அதிகமாகிவிட்டது. என்னதான் நாக சைத்தன்யாவும் - சமந்தாவும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்ததாக ஒருமித்த பதிவுகளை வெளியிட்டிருந்தாலும், சமந்தா எதிர்க்கொள்ளும் சவால்களும் , சர்ச்சைகளும் அதிகம்தான். அவையெல்லாம் சமந்தாவை தாக்கினாலும் கூட தன்னை நேர்மறையாகவே சமூக வலைத்தளங்களில் காட்டிக்கொள்கிறார் சமந்தா. இது குறித்து பேசிய அவர் “ நான் ஒரு weak ஆன ஆள் என நினைத்திருந்தேன்..ஆனால் என்னை குறித்தம் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வரும் சர்ச்சைகளை எதிர்க்கொள்வைதை வைத்துதான் நான் எவ்வளவு தைரியமானவள் என்பது எனக்கு தெரிந்தது ..விவாகரத்திற்கு பிறகு நான் உடைந்துவிடுவேன் என நினைத்தேன் ஆனால் நான் உண்மையாகவே துணிச்சலானவளாக இருக்கிறேன்“ என கூறியிருந்தார்.
விவாகரத்திற்கான காரணங்களாக சமந்தாவின் மீது அடுக்கடுக்கான குற்ற்ச்சாட்டுகள் எழுந்த நிலையில் , அவற்றிலிருந்து நெட்டிசன்கள் சற்று ஓய்ந்தனர்.இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு தீனி போடுவதாக அமைந்துவிட்டது சமந்தாவின் முதல் குத்து பாடல் . புஷ்பா படத்தில் இடம்பெற்ற ooo antava mama பாடலின் வரிகள் , ஆண்களை இழிவுப்படுத்துவதாக கூறி ஆந்திராவின் ஆண்கள் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் அது குறித்து விளக்கமளித்து படக்குழு தரப்பு பாடல் ஆண்களை குற்றஞ்சாட்டுவதாக இல்லை என விளக்கமளித்தனர்.சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அல்லு அர்ஜுனிடம், ஆண்களை காமவெறி கொண்டவர்கள் என்று சித்தரிக்கும் ஓ ஆண்டவா பற்றிய சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. இதற்கு ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, "அது உண்மைதானே..பாடலில் என்ன எழுதியிருக்கிறதோ அதுவே உண்மை" என்று கூறி இசையமைப்பாளர் டி.எஸ்.பி.யிடம் மைக்கைக் கொடுத்தார் . பாடலால் சற்று சலசலப்பு ஏற்ப்பட்டாலும் சமந்தாவின் துணிச்சலான நடன அசைவுகளையும் , தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையயும் ரசிகர்கள் கொண்டாடினர். சமந்தாவின் சிசிலிங் ஐடம் நம்பர் பாடலின் வரிக்காணொளி வெளியான நிலையில் , அவரின் நடனத்தை பார்ப்பதற்காகவே சில ரசிகர்கள் திரையரங்கிற்கு விரைகின்றனர்.
View this post on Instagram
ஆனாலும் முன்னணி நடிகை இப்படியான நடனங்களில் ஆடுவது இதுதான் முதல் முறை . பொதுவாக நடிகைகள் தங்களில் மார்கெட் குறைந்தால் மட்டுமே வேறு ஒரு படத்தில் குத்து பாடல்களுக்கு நடனமாட ஒப்புக்கொள்வார்கள். முதன் முறையாக டாப் லிஸ்டில் இருக்கும் நடிகை மற்றொரு படத்தில் ஆடுகிறார். அதிலும் சமந்தா ஐடம் சாங்கில் ஆடுவது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமந்தா தான் அந்த பாடலில் ஆடியது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். முதலில் இயக்குநர் சுகுமார் தன்னை அனுகியபோது சமந்தா மறுத்துவிட்டாராம். ஆனாலு முன்னணி நடிகயான பூஜா ஹெக்டே ரங்கஸ்தலம் படத்தில் ஆடியதை உதாரணமாக காட்டினாராம் சுகுமார்.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆன நடிகை சமந்தா பாடலில் நடிக்க கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் பலரும் சமந்தாவை பாராட்டி வருகின்றனர். அதனை பெருமிதத்துடன் தனது ஸ்டோரியில் பகிர்ந்து வருகிறார் சமந்தா. ooo antava பாடலுக்காக சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக தெலுங்கு மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)