மேலும் அறிய

Moscowin Kavery: கோரே கோக்கோ ரே.. எல்லாரோட ப்ளேலிஸ்டிலும் இருக்க பாட்டு.. சமந்தாவின் முதல் படம்.. ‘மாஸ்கோவின் காவேரி’ வந்து 13 வருஷமாச்சு!

சமந்தா கதாநாயகியாக அறிமுகமான மாஸ்கோவின் காவேரி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைகிறது.

சமந்தா கதாநாயகியாக அறிமுகமாக இருந்த மாஸ்கோவின் காவேரி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகின்றன.

நாயகியாக சமந்தா

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் மாஸ்கோவின் காவேரி. தனது கதைக்கு ஏற்ற ஒரு அறிமுக நடிகையை தேடிக் கொண்டிருந்தார் ரவிவர்மன். அப்போது மாடலிங் செய்துகொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்த மாத்திரத்தில் இவர்தான் தனது படத்தின் கதாநாயகி என அவர் முடிவு செய்தார். அந்த பெண் தான் இன்று கோலிவுட், டோலிவுட் க்யூட் குயினாக வலம் வரும் சமந்தா.

மாஸ்கோவின் காவேரி

2007ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு காரணங்களால் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள்  தாமதத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு வெளியானது மாஸ்கோவின் காவிரி. கதாநாயகியாக சமந்தா அறிமுகமாக வேண்டிய படம் என்றாலும், இந்த இடைவெளியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாபாத்திரம், இதே படத்தின் தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேஸாவே படத்தில் கதாநாயகி என அறிமுகமாகி இருந்தார்.

மேலும் தமிழில் ‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாகவும் சமந்தா அறிமுகமாகி விட்டிருந்தார். இந்த இரண்டு படங்களின் வழியாக ரசிகர்கள் மனதில் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். இதற்கு பின் வெளியான மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரன் உடன் நடித்திருந்தார் சமந்தா.

ஆனால் இப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. எனினும் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியான சமந்தாவை இந்தப் படத்தின் தோல்வி பெரியளவில் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எது எப்படியோ மாஸ்கோவின் காவேரி படத்தில் எல்லாருக்கும் பிடித்து ஒரு விஷயம் இருக்கிறது.

கோ ரே கோக்கோ ரே...

இந்தப் படத்தில் தமன் இசையமைத்த பாடலான ‘கோ ரே கோக்கோ ரே’ என்கிற பாடல் ரசிகர்களை கவர்ந்தது. வைரமுத்து வரிகள், சுச்சி, கார்த்திக்கின் கிறங்கடிக்கும் குரல்கள் என இப்பாடல் இப்போது கேட்டாலும் காதல் பட்டர்ஃப்ளைகளை பறக்கவிடும். பரபரப்பு, உற்சாகம், காதலின் புதுமை போன்ற கலவையான உணர்வுகள் கொண்ட இந்தப் பாடல் இன்று வரை ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் டாப் பாடலாக இருந்து வருகிறது.

குஷி

தற்போது சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள குஷி படத்தின் ரிலீசுக்காக காத்துள்ளார். குஷி படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்க, சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது குஷி திரைப்படம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget