Samantha Akkineni | ”நிச்சயம் செய்வேன்” - பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த சமந்தா..
பெண் ஆட்டோ ஓட்டுநர் கவிதாவுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளார் சமந்தா.
![Samantha Akkineni | ”நிச்சயம் செய்வேன்” - பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த சமந்தா.. Samantha Akkineni gifts expensive car worth Rs 12.5 lakh to a female auto driver Samantha Akkineni | ”நிச்சயம் செய்வேன்” - பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த சமந்தா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/21/b19b77fe244bdb85b66cc17097bb2846_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை சமந்தா "சாம் ஜாம்" என்னும் நிகழ்ச்சி மூலம் பலருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா என்னும் ஆட்டோ டிரைவர் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசியபோது, தனது கதையைக் கூறினார். அதில், "தனது பெற்றோர் இறந்த பின்பு நானே ஒரு ஆட்டோவை ஓட்டி எனது 7 தங்கைகளை கவனித்துக்கொண்டு இருக்கிறேன், ஆட்டோ ஓட்டுவதால் வரும் பணம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. எனது திருமணமும் தோல்வியில் முடிந்தது” என்று கூறியிருந்தார் .
இந்நிலையில் நடிகை சமந்தா ”என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக நான் செய்கிறேன்” என்று வாக்கு கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் கவிதாவுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார் . கவிதா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். நடிகை சமந்தா NGO டிரஸ்ட் ப்ரத்யுஷாவை நடத்தி வருகிறார் அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவிகளை செய்து வருகிறார் .
இதைத்தொடர்ந்து, நடித்துவரும் படங்களின் வரிசையில் அடுத்த படமாக சகுந்தலம் திரைப்படத்தில் நடிக்கிறார் சமந்தா. இயக்குநர் குணசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார் . ஃபேண்டஸி மற்றும் பெண்ணை மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார் . தேவ் மோகன் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது முற்றிலும் புராண காலத்து கதை "விஸ்வாமித்திர முனிவர் மற்றும் அப்சரா மேனகாவின் மகள் சகுந்தலாவின் கதையாக, காதல், ரகசிய திருமணம், துஷந்தா மற்றும் சகுந்தலா ஆகியோரின் அழியாத அன்பை பற்றிய படமாக இருக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளார் .
இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சமந்தா, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஒரு முக்கோண காதல் கதையாக இந்தப் படம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் படத்தின் சிங்கிள்ஸ் ஒன்றை வெளியிட்டார் . அந்த பாடல் இணையதளத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலானது. இந்தப் படத்தை பற்றிய மேற்பட்ட விவரங்கள் வரும் நாட்களில் வரக்கூடும் என்று படக்குழு தெரிவித்தது. மேலும் அவர் இன்னும் இரண்டு படங்களில் கையெழுத்திட்டுள்ளார், அது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)